Muslim History

நீங்கள் எந்த வகை வாசகர் ?

நீங்கள் எந்த வகை வாசகர் ?

வாசகர்களின் வகைகளை தொகுத்து வழங்குவது, நூல் விமர்சகரும் ஆய்வாளருமான, Ahamad Bisthamy

தேனி வாசகன் 🐝🐝

1- القارئ النحلة
மிக நன்றாக தன்னை ஒழுங்கமைத்த வாசகன்.
வரையறுக்கப்பட்ட திட்டமிடலின் பிரகாரம் வாசிப்பவன்.
வாசிப்பதை தெளிவாக, முறையாக சுருக்க குறிப்பெடுப்பதை மிகவும் விரும்புபவான். அடுத்து எந்த தலைப்பிலான
நூலை வாசிக்க வேண்டும் என்பதை
எப்போதும் தெரிந்து வைத்திருப்பான்.

2- القارئ البطريق

🐧🐧பென்குயின் வாசகன்

பருவகால வாசகர்கன். மாரி காலத்தில்
மிக அதிகமாக வாசிப்பான்.
வாசிப்பில் விசேட பருவநிலை அவனுக்குண்டு. கால் கைகளை அகல நீட்டி விரித்து கட்டிலில் புரண்டு
கம்பளி போர்வையை இழுத்து போர்த்தி
கதகதப்பான பானத்தை அருந்தியவாறு வாசிப்பான் .

3- القارئ الكسلان

🐨சோம்பேரி வாசகன்

ஒரே இருப்பில் ஒரு நூலை நிறைவு செய்ய முடியாமல் தத்தளிப்பவன்.
ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்க ஒரு மாதத்தை விழுங்குவான். அடுத்த புத்தகத்தை தீர்மானிக்க இன்னொரு மாதத்தை வீணடிப்பான்.

4- القارئ البومة

🦉🦉ஆந்தை வாசகர்கள்

அறிவார்ந்த வாசகன். உன்னிப்பான கவனக்குவிப்புடன் வாசிப்பதில் இன்பமடைவான். நுண்புலம் மிக்க நுணுக்கமான கருத்துக்கள் அவனிடம் இருக்கும். சிறிய விடயங்களையும்
நுணுக்கமாக நோக்கும் தன்மை அவனிடமுண்டு. அடுத்து வாசிக்க வேண்டிய நூலை மிகக்கவனமாகவும்
ஈடுபாட்டுடனும்
தேர்ந்தெடுக்கும் ஆற்றல் கொண்டவன்

🐛🐛புழு வாசகர்

தீராத தெவிட்டாத பிரியம் கொண்ட வாசகன். கையில் அகப்பட்டதை எல்லாம்
வாசிப்பவர். நூல்களை கொள்வனவு செய்வதை ஒரு போதும் கைவிடாதவர்
உலகில் அனைத்தையும் விட்டு விலகி வெறுமையாகி
தனது நேரம் முழுதும் தனிமையில் இருந்து தன் புத்தகங்களோடு வாழ்வர்

✍🏼 தமிழில்

Ahamad Bisthamy

________________________________

ஆளுமைகள், வரலாறுகள், ஆய்வுகள்  போன்ற விடயங்களைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top