Istanbul ஐச் சேர்ந்த பிரபல அரசியல் மற்றும் பன்முக ஆய்வு எழுத்தாளர் BURAK ELMALI அவர்களின் ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு …
அமைதி, சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றின் காவலனாக காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, இஸ்*ரேல் விடயத்தில் தனது போலி முகத்தை வெளிக்காட்டி வருகின்றது. அமெரிக்காவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வெளிப்படையான முரண்பாட்டை எடுத்துக் காட்டுகின்றது. உக்ரைன், கா_ஸா போரில் அமெரிகாவின் போலிமுகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் அமெரிக்காவின் போலிமுகம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
கா_ஸா மீதான இஸ்ரேலின் இன அழிப்பு நீண்டகால தாக்குதல் மூன்று மாதங்களையும் கடந்துவிட்ட நிலையில், அது நீண்டு கொண்டு செல்வது சர்வதேச மட்டத்தில் கவலையையும் அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.
இஸ்*ரேல் பிரதமர் நெதன்யாகு, அசைக்க முடியாத மேற்கத்திய ஆதரவால் அதிகாரம் பெற்றவர். காசாவில் தனது இனப்படுகொலை அத்துமீறலை தொடர்ந்து செல்கின்றார். சர்வதேச அளவில் இஸ்*ரேலை நம்பிக்கை இழக்கச் செய்கின்றார். இஸ்*ரேலின் பொருளாதாரத்தையும் சிதைத்துக் கொண்டிருப்பதையும் சர்வதேசம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி Joe Biden தனது ஆதரவை ஆக்கிரமிப்பு இஸ்*ரேலுக்கு விரிவுபடுத்தி வருகின்றார். சர்வதேச ரீதியில் இது தொடர்பான விமர்சனங்கள் அதிகரிக்கின்ற போதிலும், அமெரிக்கா இராணுவ ரீதியாக இஸ்*ரேலை வலிமைப்படுத்தி வருகின்றது.
செங்கடலில் ஹூதிகளின் கோரிக்கையின் பின்னரான தாக்குதல்கள் அச்சநிலையை தோற்றுவித்திருக்கின்றது.
இந்நிலையில் அமெரிக்கா தன்னை மீண்டும் ஒருமுறை மத்திய கிழக்கு புதைகுழிக்குள் இழுத்துச் சென்று பன்னாட்டுக் கடற்படைக் கூட்டணியை உருவாக்க முயன்றது. சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு என்று அழைக்கப்படுவதற்கு ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இருப்பினும், அடுத்தடுத்த நிகழ்வுகள் எதிர்பார்த்த சூழ்நிலையிலிருந்து விலகின. அமெரிக்கத் தலைமையின் சரிவு நீண்ட காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
இந்த போக்கு பிடனின் பதவிக்காலத்தில் முடுக்கிவிடப்பட்டது, மேலும் அமெரிக்கா அதன் உலகளாவிய நிலைப்பாட்டில் ஒரு உச்சரிக்கப்படும் பின்னடைவை எதிர்கொள்கிறது. மேலும் அமெரிக்காவின் தலைமைத்துவ திறன்கள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்திவருகின்றது.
‘Rules-Based’ American order இன் தோல்வி
கா_ஸா வில் நடந்து வரும் மோதலில் இஸ்*ரேல்,
முழு பிரதேசத்தையும் அழிக்கும் Carpet Bombing
முழு கா_ஸா மக்களையும் அழித்தொழிக்கும் முற்றுகையை மேற்கொண்டுள்ளது.
இது போராளிகளைத் தவிர அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் குறிவைக்கிறது. இது போர் விழுமியங்கள், விதிகளுக்கு அப்பாற்பட்ட நடத்தையாகும்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய அமைப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தல் – மோதலைத் தடுத்தல், அதேபோன்று அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்*ரேலை பொறுப்புக்கூற வைப்பதில் வெளிப்படையான தோல்விகளைச் சந்தித்துள்ளன.
வேறொரு வார்த்தையில் சொல்லுவதானால், “சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய உடன்படிக்கைகளின் நம்பகத்தன்மையைப் மேற்குலகு வலிந்து கேள்விக்குட்படுத்தியுள்ளதை உலகு தற்போது எதிர்நோக்கியுள்ளது.” என்பதே அந்த மறு வார்த்தையாகும். Chile, Bolivia, Colombia and Honduras உட்பட பெரும்பாலான நாடுகள், இஸ்*ரேலில் இருந்து தமது இராஜதந்திர தூதர்களை திரும்ப அழைத்திருக்கின்றன.
துருக்கிய ஜனாதிபதி President Recep Tayyip Erdoğan மற்றும் பிரேசிலின் ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva போன்ற தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி Bidenனின் இஸ்*ரேல் சார்பு நிலைப்பாட்டை வெளிப்படையாக விமர்சித்திருக்கின்றார்கள். இதே நேரம் இவை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் பயனற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலகளாவிய ஒழுங்கின் நம்பகமான பொறுப்பாளராக அமெரிக்காவைக் கருதிய பல நாடுகள் அக்கருத்தில் இருந்து தூரமாவதை தற்போது காணமுடிகின்றது.
வளர்ந்துவரும் அமெரிக்கப் புறக்கணிப்பு.
செங்கடலின் கேந்திர நிலைகளில் கப்பல்கள் மீது ஹூ*திக்கள், நடாத்தும் தாக்குதல்கள் சர்வதேச கடல் வர்த்தகத்தை ஒரு ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளது. இது பொருளாதார மற்றும் காப்பீட்டுக் கண்ணோட்டத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐரோப்பாவிற்கு செலவு குறைந்த பாதையை செங்கடல் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அபாயங்கள் மற்றும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கடல்சார் பதற்றம் காரணமாக, அமெரிக்கா 20 நாடுகளின் பெயரளவு ஆதரவைப் பெற்று, Operation Prosperity Guardian எனும் நடவடிக்கையைத் தொடங்கியது. எவ்வாறாயினும், Spain, Italy மற்றும் France ஆகிய நாடுகள், அமெரிக்க வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதற்கான விருப்பத்தை தெரிவிக்கவில்லை.
டொனால்ட் டிரம்ப் காலத்தில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக ஆப்கானிஸ்தானில் இருந்து திடீரென வெளியேறியது போன்ற ஒப்பீட்டை கருத்தில் கொண்ட அமெரிக்காவின் ஐரோப்பிய நற்பு நாடுகள் அமெரிக்க அணியில் ஒன்றிணைவதை தவிர்த்திருந்தமை அமெரிக்காவுக்கு நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் NATO வின் விரிசலில் ஒரு அடையாளம் என நோக்கப்படுகின்றது. ஹூதிகளுக்கான எதிர்ப்பு விடயத்தில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் அல்லாமல் தனித்து இயங்க முடிவெடுத்துள்ளமை அமெரிக்காவின் தலைமையை ஐரோப்பா புறக்கணிப்பதாக நோக்கப் படுகின்றது.
உலக அரங்கில் அமெரிக்காவின் சரிவுமுகம்.
October 7 முதல் அமெரிக்காவின் முடிவுகள் விமர்சனத்திற்கு உட்பட்டு வருகின்றன. நெத*ன்யாகு அரசாங்கத்தின் மீது எந்தவிதமான செல்வாக்கும் இல்லாமல் இஸ்*ரேலுக்கு முற்றிலும் அடிபணிந்த நிலைப்பாட்டை அமெரிக்க Biden நிர்வாகம் இன்றுவரை வெளிப்படுத்தி வருகின்றது.
தன்னை உலக சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் காவலனாக காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை உலகிற்கு படம்பிடித்துக் காட்டியது. மேலும் அமெரிக்காவின் ‘புதிய உலக ஒழுங்கு’ போன்ற சொல்லாடல்கள் உலகின் நலனுக்காக அல்லாமல் அமெரிக்காவின் நலனுக்காக மாத்திரமே உருவாக்கப்பட்டன என்ற அம்சத்தையும் உலக நாடுகள் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன.
European Commissionனின் தலைவர் Ursula von der Leyen மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் John Kirby போன்ற முக்கிய நபர்களின் முரண்பாடான அறிக்கைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, உலகளாவிய ரீதியில் அதிருப்தியை மேலும் தூண்டியது.
மேற்கத்திய நாடுகளின் தாராளவாத ஒழுங்கு கட்டமைப்பிற்கு விசுவாசம் மற்றும் நடைமுறையில் அவர்களின் போலித்தனம் ஒரு அச்சுறுத்தலை முன்வைக்கின்றது. இந்த இரட்டை நிலைப்பாடானது கூட்டு அர்ப்பணிப்பை உடைக்கும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.
உதாரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் இஸ்*ரேலின் “தற்காப்பு” கதைக்கான தொடர்ச்சியான வாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இஸ்*ரேலின் அரச பயங்கரவாதத்தை நினைவூட்டும் வகையில், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, Gaza போன்ற பிரதேசங்கள் போரை நியாயப்படுத்த தற்காப்பு நடவடிக்கையை கோரும் முன்னுதாரணத்தை தோற்றுவிக்கும், என்பதோடு, அது கா_ஸா என்ற காரணத்தினால் உலக நாடுகள் எத்தகைய பதிலை அளிக்கப் போகின்றன ? இது ஒரு முரண்பாடான சூழ்நிலைக்கு வழிவகுக்கின்றது, அங்கு விதிகளின் விளக்கங்கள் பரவலாக வேறுபடுகின்றன, ஒரு ஒத்திசைவான உலகளாவிய ஒழுங்கிற்கு ஒரு பெரிய இடைவெளியை விட்டுச்செல்கின்றன, இந்த உலகளாவிய முரண்பாடுகளின் முக்கிய குற்றவாளியாக அமெரிக்கா திகழ்கின்றது.
இந்த வளர்ச்சிகளுக்கு மத்தியில், குறிப்பாக காசா மோதலின் சூழலில், பலமுனை உலகம் என்ற கருத்து பிழைத்துப் போகின்றது. அதன் குறிப்பிடத்தக்க மனிதாபிமான தாக்கங்களுடன், இந்த நெருக்கடி உலகளாவிய புவிசார் அரசியல் இயக்கவியலை மறுமதிப்பீடு செய்வதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த உருமாறும் காலங்கள் 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய இத்தாலிய தத்துவவாதியும் ஆர்வலருமான அன்டோனியோ கிராம்சியின் சுயநிறைவேற்ற தீர்க்கதரிசனத்தை பிரதிபலிக்கின்றன: “பழைய உலகம் இறந்து கொண்டிருக்கிறது, புதிய உலகம் பிறக்க போராடுகிறது. இப்போது அரக்கர்களின் காலம்.” என்பதே அதுவாகும்.
– – – – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…