Article

உம்ரா வழிபாட்டில் Mike Tyson உம் Rapper DJ Khaled உம்

உம்ரா வழிபாட்டில் Mike Tyson உம் Rapper DJ Khaled உம்

முன்னாள் குத்துச்சண்டை வீரர் Mike Tyson (👈🏻click) அவரது தந்தை மற்றும் பிரபல அமெரிக்க Rapper DJ Khaled (👈🏻click) ஆகியோர் உம்ரா செய்வதற்காக முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (09.12.2022) வருகை தத்திருந்தனர்.

கஃபாவில் இருந்து, DJ Khaled உம்ரா வணக்க வாழிபாட்டில் கலந்துகொண்டது தொடர்பில் வெளியிட்ட உணர்ச்சிகரமான Video அரபு ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்திருந்தது.

“மக்காவிற்குள் நுழைந்த மறுகணமே என் கண்களில் கண்ணீர் வந்தது. அது ஆனந்தக் கண்ணீர். எனது வாழ்நாள் முழுவதும் மக்காவிற்கு சென்று பிரார்த்தனை செய்யவும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவும் விரும்பினேன். உலகம் அன்பில் திளைத்திருக்கவும், நல் வாழ்க்கைக்காகவும், அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தேன்,” என்று Instagram இல் DJ Khaled, பதிவொன்றையும் வெளியிட்டார்.

மற்றொரு Instagram பதிவில், குத்துச்சண்டை வீரர் Mike Tyson மக்காவில் உம்ரா வணக்க வழிபாட்டிற்காக வந்திருந்தமையையும் Khaled பதிவிட்டிருந்தார்.

மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள. . .

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top