எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் இரவு ஏன் சோகமான இரவாக இருந்தது?
தொகுப்பு : முஹம்மத் பகீஹுத்தீன்
அர்துகான் தலைமை வகிக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான ஆளும் கட்சி தனது பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கலாம் என சுயமதிப்பீடு செய்ததன் பின்னர் ‘இந்த தடவை ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக் கொண்டால் போதும் என்றும் பாராளுமன்றத்தில் பொரும்பான்மையை பெறுவது கடும் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது என்றும் உணர்ந்திருந்தனர்’ ஆனால் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆளும் கட்சியின் கூட்டணிக்கே பாராளுமன்றத்தில் மீண்டும் பெரும்பான்மை கிடைத்தது.
அர்துகான் துருக்கியில் அறிமுகம் செய்த ஜனாதிபதி முறைமையை ஒழித்துக் கட்டிவிட்டு மீண்டும் பாராளுமன்ற முறைக்கு மாறுவதே எதிர்க்கட்சியின் கனவாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவு எதிர்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் பிறப்பதற்கு முன்பே இறந்து பிறந்த குழந்தை போல கனவு கலைந்து போனது.
ஆறு கட்சி கூட்டணியுடன் இணைந்த தேசியவாத எதிர்க்கட்சியான துருக்கிய குட் கட்சியின் தலைவி மிரல் அக்ஸ்னர் தனது வாழ்நாள் கனவு பிரதமர் ஆவது என்று அறிவித்திருந்தார். அவரது அற்ப ஆசை காற்றில் பறந்தது. கூட்டணியும் தோல்வியடைந்தது.
துருக்கியின் பழம் பெரும் கட்சியான குடியரசுக் கட்சி கமாலிஸத்தை சுமந்து வரும் பிரதான எதிர் கட்சியாகும். எப்படியாவது அர்துகானை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மதம் மற்றும் ஹிஜாப் விவகாரங்களில் இம்முறை கடும் விட்டுக் கொடுப்புக்களை அது மக்களுக்கு வழங்கியது. இருந்தாலும் அவர்களின் நடிப்பு வாக்காளர்களை ஈர்க்கவில்லை.
எதிர்க்கட்சியில் இணைந்த அஹ்மத் தாவுத் ஒக்லோவின் கட்சி போன்ற கட்சிகளால் எதிர்க் கட்சிக்கு எத்தகைய பலனும் கிடைக்கவில்லை. மாறாக எதிர்கட்சியின் ஆசனங்களில் இருந்து 36 இடங்களை அவை தமதாக்கிக் கொண்டன. அந்தக் கட்சிகள் கனவிலும் நினைக்காத எண்ணிக்கை அது.
இதனால், மதச்சார்பற்ற இளைஞர்கள் கடும் விசனப்பட்டனர். தமக்கு எதுவும் கொடுக்காமல் எதிர்கட்சி கூட்டணியை பயன்படுத்தி தம்வாசியை பெற்றுக் கொண்டனர் என்று கோபம் கொண்டனர்.
துருக்கியின் தோல்வியில் தீவிர ஆசை கொண்ட காலணித்துவ நாடுகளும் எதிர்க்கட்சியும் முதல் சுற்றிலேயே அர்துகானின் ஆளும் கட்சியை தீர்த்துக் கட்ட முடியும் என நப்பாசை கொண்டன. அர்துகானின் ஆட்டம் முடிந்து விட்டது என எதிர்க்கட்சி அசைக்க முடியாது நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. 2.5 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி தோல்வியடைந்து இரண்டாம் இடத்தில் இருந்தது. அவர்களின் திட்டம் அங்கேயே தவிடுபொடியாகியது.
எதிர் தரப்பில் உள்ள சில இளம் வாலிபர்கள் இனி வாழ்கையில் அர்துகானை வெல்லவே முடியாது என விரக்தியடைந்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், அர்துகான் நாட்டில் பேரழிவு தரும் நிலநடுக்கத்தை சந்தித்தார். அது சாதராரண நிலநடுக்கம் அல்ல. மிகப்பராரிய அழிவுகளையும் தொடர் துன்பங்களை தந்த சோக நிகழ்வு. அதற்கு முன்பு ராணுவம், சதிப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு செய்ய எத்தனித்தது. உக்ரைன் போரினால் துருக்கியின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது. அதற்கு முன்பு கொரோனாவின் பிடியில் சிக்கியது. அமெரிக்காவம் ஜெர்மனியும் பிரிட்டனும் பிரான்ஸும் அவர்களுடன் கைகோர்த்துக் கொண்ட எதிரிகளும் நேரிடையாகவும் மறைவிலும் அவருக்கு எதிராக கூட்டிணைந்து செயற்படுகின்றன.
மேலும், அனைத்து முக்கிய கட்சிகள் மற்றும் நகராட்சிகளின் தலைவர்கள் அவருக்கு எதிராக திட்டமிட்டு ஒன்றிணைந்து செயற்பட்டனர். இத்தனை சதித் திட்டங்களையும் மீறித்தான் அர்துகான் இந்த வெற்றியை பெற்றுள்ளார். ஏதிரிகளின் அனைத்து சதிகளையும் மிகைத்து அவர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
எனவே தான் அந்த இளைஞர்கள் அர்துகானையும் அவருடைய கட்சியையும் தோற்கடிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது என்று விரக்தியுடன் கேட்கின்றனர். அதனால் தான் அவர்கள் அந்த இரவை சோகத்தில் தள்ளாடும் நீண்ட இரவாகக் கண்டார்கள்.
வெற்றி தோல்வி மாறி மாறி வரும். ஆனால் என்றும் சத்தியம் நிலைக்கும்.
எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
எமது அறிவு அற்பமானது. இறைவன் திட்டத்தில் மறைந்துள்ள நலன்களை நாம் புரிய நாட்கள் எடுக்கும். இறைவனுடைய நாட்டத்தில் எப்போதும் நன்மையே உள்ளது என்று உறுதியாக விசுவாசிப்பவனே உண்மையான முஃமினாவான்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…