நேர்மையான
உண்மையான
அறிவும்
ஆற்றலும் கொண்ட ஒரு
தலைவரால்
ஜனாதிபதியால்
ஒரு நாட்டை முன்னேற்றலாம்
என்பதற்கு மிகச்சிறந்த
நடைமுறை உதாரணம்
“துருக்கி” என்றால் அது மிகைப்பட்டுத்தப்பட்டதாக இருக்காது….
நேர்மை என வருகின்ற போது
அங்கே
களவு
பொய்
மோசடி
ஏமாற்று
ஊழல்
எதுவும் இருக்காது
அரச சொத்துகள் அநியாயமாக்கப்படமாட்டாது
களவாடப்படமாட்டாது
வீண்விரயமாக்கப்படமாட்டாது…
எந்த ஒரு வேலைத்திட்டமும்
பின்போடப்படமாட்டாது
ஊழல் நடக்காது
கொமிசன் இடம்பெறாது..
எனவே நாடு முன்னேறும்…
அர்துகான் ஒரு முறை சொன்ன வார்த்தை..
எனது கையொப்பத்திற்காக வருகின்ற எந்த ஆவணத்தையும் நான் நாளைக்காக வைத்திருப்பதில்லை, பிற்போடுவதில்லை…
மற்றொரு முறை…
“ நாட்டை எவ்வாறு முன்னேற்றினீர்???? என்ற கேள்விக்கு அளித்த பதில்
“ நாம் களவாடுவதில்லை”
நாடு பாத்திருக்க முன்னேறியது
ஐரோப்பாவின் நோயாளி, இப்போது IMF யிற்கு கடன் கொடுக்கும் நாடாக எழுந்து நிற்கின்றது …
துருக்கி எமக்கு நிறைய பாடங்களை சொல்லிச் செல்கின்றது…
இறைவன் ..
எல்லா நாடுகளிலும்
எல்லா மண்ணிலும்
எல்லா பிரதேசங்களிலும்
பௌதீக வளங்களை
பெறுமதியான மூலவளங்களை
கணிப்பொருள்களை
இயற்கை வளங்களை படைத்திருக்கின்றான்,வைத்திருக்கின்றான்…
( உ-ம் இலங்கை நீல மாணிக்கம், இலங்கை தேயிலை, வள்ளபட்டை, இலங்கை கருவா உலகளவில் அதிக கேள்வி உள்ளவை..)
அதேபோன்று திறமையான, விதம் விதமான மனித வளங்களும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளன…
மனிதன்,
பொறுப்பானவர்கள்
தமது பொறுப்புகளை நேர்மையாக மேற்கொள்கின்ற போது பாரிய மாற்றங்கள் முன்னேற்றங்கள் நிகழும்
அல்லது நிகழ்த்தலாம்…
துருக்கியில் 2016 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி நடந்த போது….
அது குறித்து மர்ஹூம் ஷேஹ் கர்ளாவி அவர்கள் கூறிய வார்த்தை
“அல்லாஹ் ஒருபோதும் அவரை இழிவுபடுத்தமாட்டான்….அநியாயமிழைக்கப்பட்டவர்களுக்கு உதவினார்… வீடின்றி நாடின்றி அல்லல்படும் மக்களுக்கு இடம்கொடுத்தார்…துரத்தப்பட்டவர்களுக்கு அபயமளித்தார்..”
முர்ஷித் தாஹா
16/06/2023
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…