ஆசிரியர் ஜிப்ரி ஹாசனின்
எழுத்தின் தடம் குறித்து…
நூலறிமுகம் : ஆய்வாளரும் நூல் விமர்சகருமான M.M.A.BISTHAMY அவர்களின் பன்முக மொழிநடையில்…
ஈழப்படைப்பாளிகள்
14 பேரின் படைப்பு வெளியில் காத்திரமான ஒரு சஞ்சாரத்தை செய்வதாக உள்ளது.
படைப்பாளிகளின்
படைப்புகள் மீதான அலசலாக
எழுத்தின் தடம் உள்ளது.
எழுத்தின் வலிமை
ஆகர்ஷணம்
ஆழ்ந்த பார்வை
அவதானம் போன்றவற்றை நோக்கி வாசகர்களை திசைவழிப்படுத்துகிறது
நூல்.
இன்னொரு வகையில் வாசிப்பின்
பன்முக தளத்தில்
அதன் மகாஸித்களுள் ஒன்றான
படைப்பாளிகளது
படைப்புகள் மீதான கூரான ஒரு பாய்ச்சல் வாசகன் உருவாக்க வழியமைக்கிறது.
வாசித்து சுவைத்து முடித்து மூடி வைத்து
சிற்றின்பங்காணாமல்
பேரின்பம் நோக்கிய பெருத்த அனுபவத்தை தர எத்தனிக்கிறது
நூல்
ஒரு நூலை வாசிப்பது வேறு
அறிமுகம் செய்வது இன்னொன்று
விமர்சிப்பது மதிப்பிடுவது இன்னொன்று
ஒரு நூலை எழுதுவது வேறு
மொழிபெயர்ப்பது வேறு
நினைவில் வைத்திருப்பதும் அவசியப்படும் போது மீட்டுவதும் வேவ்வேறு.
மீள்வாசிப்பு வேறு.
ஒவ்வொன்றுமே வேறுபட்ட அனுபவத்தை சுவையை ஆழத்தை தாக்கத்தை உணரவைக்கும்
எழுத்து
எழுத்து ஓர் ஆயுதம்.
அது பகைவனை வீழ்த்துகிறது.
எழுத்து ஒரு கலாசாரம்.
அது மதிக்கப்படுகிறது.
எழுத்து ஒரு நாகரீகம்
அது கட்டிக்காக்கப்படுகிறது.
எழுத்து ஒரு பண்பாடு.
அது பேணப்படுகிறது.
எழுத்து ஒரு சமூகம்.
அது தலைநிமிர வைக்கிறது.
எழுத்து ஓர் ஆன்மா.
அது உயிர் வாழ்கிறது
எழுத்து ஒரு வரலாறு.
அது மீளவும் வாசிக்கப்படுகிறது.
எழுத்து ஒரு சித்திரம்.
அது எண்ணங்களை வடிவமைக்கிறது.
எழுத்து ஒஅர் அரசியல்.
அது உள்ளங்களை ஆள்கிறது.
எழுத்து ஒரு காந்தம்.
அது ஆன்மாவை ஈர்க்கிறது.
எழுத்து ஒரு குறியீடு.
அது ஆயிரம் அர்த்தம் தருகிறது.
எழுத்து ஒரு சூனியம்.
அது மக்களை ஏமாற்றுகிறது
எழுத்து ஓர் அருள்.
அது ஆண்டவனை நினைவூட்டுகிறது.
எழுத்து ஒரு நண்பன்.
அது ஆறுதல் தருகிறது.
எழுத்து ஓர் அமானிதம்.
அது குறித்து விசாரணை இருக்கிறது.
எழுத்து ஒரு சாபம்
அது ஆன்மாவை கீறிக்கிழித்து மானத்தை போக்குகிறது.
இறைவன் துண்டிக்கப்பட்ட எழுத்துக்களில் ஆங்காங்கே சத்தியமிடுவது புரிகிறதா….?
எழுத்தின் தடம் இந்த அனைத்துமானது
எனலாம்.
எழுத்தின் வலிமை எழுத்தை நேசிப்பவர்களுக்கு புரியும்…
எழுத்து
எழுத்துக்கு எப்போதும் அமானுஷ்யமான
அதியற்புத வலிமை உண்டு. அது எங்களையும் உங்களையும் இன்னோர் அதிசய உலகிற்கு கொண்டு செல்லும். பன்முகப்பட்ட வாசிப்பினூடாக வரும் அந்த எழுத்துக்கள் எம்மை செதுக்கும். வாழ்வை வளமாக்கி செழித்தோங்க வைக்கும். காணாத பக்கங்களை எல்லாம் தரிசிக்கும் வாய்ப்பை எழுத்தே எமக்கு தந்து விடுகின்றன.
வாசிப்பு எழுத்தை முழுமையாக்கும் எழுத்து மனிதனை இன்னும் முழுமையாக்கும். வாசிப்போரையும் செதுக்கி விடும். எழுத்துக்கள் எப்போதும் பன்முக தன்மை கொண்டதாக அமைய வேண்டும். எங்கள் வாசிப்பு தளமே அதற்கு வழியமைக்கும். தெரிந்த எல்லா மொழிகளிலும் வாசிக்கவேண்டும். எல்லா கோணங்களிலும் வாசிக்க வேண்டும். கதை, கவிதை, இலக்கியம், புனைவு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, கோட்பாடு, ஒப்பீடு, வாழ்க்கை சரிதம், விமர்சனம், ஆய்வு, என்று சகலதையும் கடந்து செல்ல வேண்டும்.
சிந்தனைகளை எழுதுகையில் கோட்பாட்டு மொழிப்பிரயோகம் அவசியம். அனுபவங்களை எழுதுகையில் கலைநயம் மிக்க மொழி அவசியம். மொழியில் சுவையும் சுகமும் சுவாரஸ்யமும் இருப்பின் அது அனைவரையும் ஆகர்ஷிக்கும்.
மொழியின் அற்புதமே அதனை கையாளும் சொற்களில் தான் புதைந்துள்ளது. தொலைவில் உள்ளவர்களையும் கூட எம்முடன் நெருங்க வைப்பது மொழிதான். மொழியின் வசீகரம் எம்மை எப்போதும் ஆட்கொண்டு விடும்.
எமது எழுத்து மொழி எப்போதும்….
எளிமையானதாக
இயல்பானதாக
ஈரமானதாக
இரக்கமானதாக
இதயமுள்ளதாக
இதமானதாக
ரிதமானதாக
ராகம் கொண்டதாக
தாளம் கொண்டதாக
ஈர்ப்புமிக்கதாக
சுவையானதாக
சுகமானதாக
இன்னிசைத்தன்மை கொண்டதாக
கலைநயம் கொண்டதாக
கவிதைத்தனம் கொண்டதாக
குழந்தைத்தனம் கொண்டதாக
இளமையும் துடிப்பும் கொண்டதாக
முதிர்வடைந்ததாக
அமைகையில் அது வாசகர் எல்லோரையும் ஆகர்ஷிக்கும். ஈர்க்கும்.
எழுத்தறிவித்தவன் இறைவன். எழுத்தில் இறைவன் சத்தியமிட்டுள்ளான்.
டொமினிக்கில் தொடங்கி ஓட்டமாவடி அரபாத் வரை
ஜிப்ரியின் எழுத்தும் தடம்பதித்து இடம்பிடிக்கிறது
இலக்கிய
வாசக
விமர்சன உலகில்
ஜிப்ரிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
✍🏻 M.M.A.BISTHAMY
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…