Article

மாணவர்களுக்கான சுரக்க்ஷா காப்புறுதி – அறிந்து கொள்ளப்படாத நன்மைகள்.

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி - அறிந்து கொள்ளப்படாத நன்மைகள்.

மாணவர்களுக்கான சுரக்க்ஷா காப்பீட்டு சந்தர்ப்பங்கள் எவை ?

A. சுகாதார காப்பீடு
A.1. தங்கியிருந்து சிகிச்சை பெறல்.
A.2. வெளிச் சிகிச்சை.
A.3. கடுமையான நோய்கள்
B. விபத்துக் காப்பீடு
B.1முழுமையான மற்றும் நிரந்தர ஊனம்.
B.2நிரந்தர அரைகுறையான பாதிப்புகள்.
C. ஆயுட் காப்புறுதி
D. விசேட நன்மைகள்

A. சுகாதாரக் காப்பீட்டில் உள்ள நன்மைகள் எவை ?

A.1 தங்கியிருந்து சிகிச்சை பெறல்

தங்கியிருந்து சிகிச்சை பெற ரூபா 2 இலட்சம் வரை காப்புறுதி.

  • வதிவிட சிகிச்சைகள் மருந்துகளுக்கான செலவுகள் அரச வைத்தியசாலை கட்டண வாட்டில், தனியார் வைத்தியசாலை, தனியார் ஆயுள்வேத வைத்தியசாலை சிகிச்சைகள்…
  • வைத்தியர் / விசேட வைத்திய நிபுணர் கட்டணம்…
  • வைத்திய பரிந்துரையின் கீழ் நோயாளியை கவனிப்பதற்காகன செலவு
  • அரச / தனியார் ஆயுள்வேத வைத்தியசாலை கட்டணம் செலுத்தாத வாட்டு ரூ. 3000 நாளாந்த கொடுப்பனவு.
  • சத்திரசிகிச்சை செலவுகள் நோய் நிர்ணய பரிசோதனை, மருந்துகள், சத்திரசிகிச்சை ஆரம்பநிலை பரிசோதனைகள் செலவுகள், விசேட சிகிச்சைகள்.
  • வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாது சத்திர சிகிச்சை செய்யப்படும் செலவுகள்.
  • வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாது செய்யப்படும் பரிசோதனைகளுக்கான செலவுகள்.
  • கடுமையான அல்லது ஆபத்தான நோய்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட விசேட துணை போசாக்கு உணவுக்கான செலவுகள்.
  • நாட்பட்ட நோய்கள் / சத்திர சிகிச்சைகள் / விபத்தின்போது வீட்டிலிருக்கும் காலத்துக்காக வைத்தியரின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்படும் கொடுப்பனவு.
  • வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன் 7 நாட்களுக்கான கொடுப்பனவு.
  • வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 14 நாட்கள் வைத்தியரின் ஆலோசனையின் அடிப்படையில் ஓய்வு பெறுதல் அல்லது சிகிச்சை பெறுதல் போன்றவற்றுக்காக.
  • நாட்பட்ட நோய்கள்/ சத்திர சிகிச்சைகள் / விபத்தின்போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றுக்கான செலவுகள்.
  • விபத்தொன்றில் பின்னர் செய்யப்படும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைக்கான செலவுகள்.
  • அம்பீயுலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்ளல்.

A.1.1 இவ்வாறு தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதி நலனை பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் எவை ?

  • நோய் நிர்ணய அட்டை, வெளியில் பெற்றுக்கொண்ட மருந்துகள், பரிசோதனைகளுக்காக வைத்தியரினால் வழங்கப்பட்ட மருந்து அட்டை, காரியாலய முத்திரையுடன் கூடிய கட்டணம் செலுத்திய ரசீது.
  • நோயாளியின் பெயர், சுரக்ஷா அட்டை இலக்கம், பாடசாலை கணக்கெடுப்பு இலக்கம், வைத்தியசாலை பெயர், பாடசாலை பெயர், பிறப்புச் சான்றிதழ் பத்திரம், தொலைபேசி இலக்கம்…

A.2. வெளிச் சிகிச்சை.
கீழ்காணும் இனங்காணப்பட்ட வாழ்க்கை பாதிப்புடன் கூடிய விசேட நோய்களுக்கான மருந்து மற்றும் பரிசோதனை மற்றும் கண்டறிதலுக்குரிய செலவுகளின் தழுவல்.

புற்றுநோய்
பக்கவாதம்
குருடு
மூன்றாம் நிலை எரி காயங்கள்
சயரோகம்
காக்காய் வலிப்பு
தலசீமியா
மனநோய்
பிறப்புக் குறைபாடு
சிறுநீரக நோய்
இருதய நோய்கள்
நியூமோனியா
நீரிழிவு
மன அழுத்தம்
Endocrinr problems
தைரோயிட்
விட்டமின் குறைபாடு
நுரையீரல் உபாதைகள்
கண், காது கேட்டல் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் குறைபாடு சீர்செய்தல் சிகிச்சைகளுக்கு உபகரணங்களை வாங்குதல்.
தொற்று நோய்களுக்கான மருந்துகளும் பரிசோதனைகளும்
பல் உபாதைகளுக்கான சிகிச்சைகள் (பல் அகற்றல், நிரப்புதல் மாத்திரம்)
ஆயுர்வேத சிகிச்சைகள்
வைத்திய நிபுணர்களிடமிருந்து சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்கள் (பற்றுச்சீட்டு, வங்கி மூலம், வெப்தளம், விசேட நிறுவனங்கள், கைத்தொலைபேசி ஆகியவை ஊடாகவும் கட்டணங்கள் செலுத்தப்படும்.

தடுப்பூசி போடுதல் மற்றும் விளையாட்டின் போது ஏற்படும் அனர்த்தங்களைத் தடுத்தல்.

A.3. கடுமையான நோய்கள்.

Heart surgery
Cancer Treatments
Kidney transplantation
Dialysis
Hip, Shoulder, Knee Replacements Brain Surgery
Scoliosis
Cochlear Implantation
Spinal cord Compression
Liver Transplantation
Eye Surgery
Artificial limbs
Bone Marrow transplantation
Equipment for Special Needs
Nutrition supplementation for critical illnesses

மேற்குறிப்பிட்டுள்ள கடுமையான நோய்களுக்கு 2 இலட்சம் அல்லது அதைவிட அதிகம் காப்புறுதித்தொகை வழங்கப்படும்.

B. விபத்துக் காப்பீடு

B.1 முழுமையான மற்றும் நிரந்தர ஊனம் – 2 இலட்சம்

B.2 நிரந்தர அரைகுறையான பாதிப்புகள் – 150,000 – 200,000

C. ஆயுட் காப்புறுதி
C.1 பெற்றோர் சட்டபூர்வமான பாதுகாவலர் மரணம் அடைதல். – 200,000 காப்பீடு.

  • வருடத்தில் தாய் தந்தை இருவருக்கும் . . .
  • குடும்பத்தில் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் காப்பீடு உண்டு . . .

C.2. மாணவர் மரணம்

  • மாணவர் மரணத்தின்போது இறுதிக் கிரியைகளுக்காக 150,000 ரூபா வழங்கப்படும்.

D. விசேட நன்மைகள்.
வைத்தியசாலை கட்டணம்
வைத்தியர் கட்டணம்
மருந்து மற்றும் பரிசோதனை கட்டணம்
பதிவு கட்டணம்
ஆகியவற்றுக்காக 20% கட்டணங்கள் குறைக்கப்படும்.

மேலும் இவைபோன்ற செய்திகளைப் பெற்றுக்கொள்ள எமது Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top