சவூதி அரேபியாவின் விஞ்ஞானிகள், மக்கா பகுதியில் உள்ள ஒரு பழங்கால சந்தைத் தொகுதியைக் கண்டறிந்துள்ளனர். இது இஸ்லாத்திற்கு முந்திய ஆரம்ப காலங்களில் மிக முக்கியமான அரபு சந்தைகளில் ஒன்றாகக் காணப்பட்டிருக்கின்றது.
Souq Habasha எனப் பெயரிடப்பட்ட இந்த தளம், ஆராய்ச்சி மற்றும் ஆவணக் காப்பகங்களுக்கான King Abdulaziz அறக்கட்டளை, கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் பாரம்பரிய ஆணையத்தின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Souq Habasha – இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே முக்கிய அரபு சந்தையாக காணப்பட்டுள்ளது. பண்டைய அரேபிய தீபகற்பத்தின் மேற்கு Tihamah பகுதியில் Souq Habasha மிகப்பெரிய பருவகால அரபு சந்தையாகத் திகழ்ந்துள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியில் ரஜப் மாதத்தின் முதல் நாளில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் எட்டு நாட்களுக்கு இந்த Souq Habasha நடத்தப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய ஆண்டு 197 (கி.பி. 813) வரை நடைபெற்றுவந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றுடன், தொடர்புடையதாக இந்த சந்தை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், புவியியலாளர்கள், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை கற்பவர்கள் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும், இக் கண்டுபிடிப்பு பிரயோசனமானதாக அமையும் என சவூதி ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.
Studies and Research எனும் project மூலம் 40 வருடகால தேடலின் பின் இச் சந்தைத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Souq Habasha scientific குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிடும்போது, கடலோரப் பாதை, Tihama road Sarawat மலைகளின் சிகரங்கள் மற்றும் Elephant road உள்ளிட்ட முழுமையான வழிகளை வரைவதில் நாங்கள் பணியாற்றினோம்.
இவ்வாறு நான்கு தடயங்கள் துல்லியமான வரைபடங்களில் வரையப்பட்டன. அவை உண்மையில் சந்தையின் இருப்பிடத்தை தீர்மானிக்க உதவியது. பின்னர் அவை வரலாற்றாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றியும் சந்தை குறிப்பிடப்பட்டுள்ளது; என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவித்தனர், நபி (ஸல்) அவர்கள் தனது பணிக்கு முன் குறிப்பிட்ட சந்தைத் தொகுதியில் வர்த்தகம் பணிகளில் ஈடுபட்டமையும் வரலாற்றில் பதிவாகியுள்ளமையையும் வரறாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இவ் வரலாற்றுச் சந்தையானது, தண்ணீர், மழை மற்றும் மேய்ச்சல் நிலம் நிறைந்த பகுதியில் அமையப் பெற்றிருந்தது.
அதன்படி, மக்கா பிராந்தியத்தின் கடற்கரை நகரமான Ardiyat இல் Wadi Qanunaவின் தெற்குக் கரையில் Souq Habasha அமைந்திருந்தது.
மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள. 👇🏻