நூலாசிரியர் : R.M. Nowsaath
நூலறிமுகம் : ஆய்வாளரும் நூல் விமர்சகருமான M.M.A.BISTHAMY அவர்களின் பன்முக மொழிநடையில்…
R.M. Nowsaath அவர்களின் தீரதம் எவ்வளவு சுவை என்றால் சொல்லி தீர்க்க முடியாது.
அரசியலை
பண்பாட்டை
வாழ்வியலை
பிரச்சினைகளை
உண்மைகளை
ஏன் ஊகங்களைக்கூட
சிறந்த கதையாக்குவதில்
ஈழத்தில் அழியாத தடம் பதிப்பவர் R.M.Nowshath அவர்கள்.
றாபிக் மாஸ்டர் மரியம் பீவிக்கு ஆத்து மீன் சாப்பிட பட்ட பாடு தான் உண்மையில்….கவலையாக உள்ளது…..
உலகத்தரம் வாய்ந்த பேரிலக்கியம் போல
குறுங்கதையாக
உள்ள சிறுகதைகள்… மூலம் வாசகனை நெருங்க விடுகிறார்….
ஆனால் அந்த கெழுத்தி மீனின் சுவை போலத்தான் இந்த தீரதமும்.
நடுத்தர வர்க்கத்தை விடவும்
யாசக வர்க்கம் ஒட்டுண்ணியாக இருந்து
எவ்வளவு இன்பமாக வாழ்கிறார்கள்.
றாபிக் மாஸ்டர் போன்றவர்கள் கௌரவமாக ஏழையாக காலம் கடத்துகிறார்கள்.
கிழக்கின் மொழியை
தன் அனுபவத்தை
உணர்வை
சூட்சுமமாக
சுவாரஸ்யமான வகையில் தூக்கலாக
வைப்பதில் அவரது சிறுகதைகளுக்கு
நிகர் அவர் தான்…..
தீரன் அவர்களின் பெரும்பாலான அனைத்து படைப்பிலக்கியங்களையும்
பருகுத்தீரத்துவிட்டேன்…
இறுதியாகிய பருகிய தீரதம்
அதன்
ஒய்த்தா மாமா….(இதனை ஒத்ததான ஜின் வசியமாக பெண் வசியமாக மயிர் கூச்செரியும்
ஒரு மர்ம சமாச்சாரமாக
வெள்ளி விரலிலும் வேறுவகையில் நோக்கில் போக்கில்
காணலாம்….) தொடங்கி… கள்ளக்கோழி… பொன்னெழுத்துப்பீங்கான்… அணில் என வந்து
…..
ஆத்து மீன் ஆசை வரை…. வாயில் எச்சில் ஊற..
தீரதத்தை தீர்த்தம் போல பருகலாம்.
கபடப்பறவையை பொறுத்தளவில் கொஞ்சம் பயமாக உள்ளது
எழுதி கிழிக்காவிட்டாலும்
அடுக்கடுக்காக வைத்துள்ளதை
பிச்சனங்கள் வந்து பிய்த்தெறியுமா
தாள்களை
பிடுங்கி எரிக்குமா எனும் பயம்தான் அது.
அணிலை தனியாக முகநூலில் பதிவேற்றி இருந்தார்.
சகவாழ்வு பற்றிய சாகாவாழ்வும்
வரமும் பெற்ற அழகிய கதை இது.
தீரனின் தீரதத்தின் ஆறாவது கதையான தீரதத்தை வாசிக்கையில்
பிரெஞ்ச் எழுத்தாளர்
(Antoine de Saint-Exupery)
யின் குட்டி இளவரசனின்
கிரகங்கள் நோக்கிய பயணம்.
ரஜப் மாத மிஃராஜ்
அல்லாமா இக்பாலின் ஜாவிது நாமாவில்
வரும் ரூமியுடனான பயணம் என்னுயிரே என்னுயிரே
என் உயிரே பாடலில் வரும் காதலின் ஏழு நிலை போன்றன
இந்த பெப்ரவரி 14 இல் நினைவூட்டப்பட்டு
ஆத்ம சுகம் தருவது அதிர்ச்சி யும் அற்புதமும் தான்.
கிழக்கின் வாழ்வை வாழ்வியலை தீரதம் வழியாக…. தூக்கலாக தந்து தமிழுக்கும் சிறுகதைக்கும்
பெருமை சேர்த்துள்ள… நௌசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
✍🏻 M.M.A.BISTHAMY
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…