Latest News

விகிதாசாரத் தேர்தலில் ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு ?

விகிதாசாரத் தேர்தலில் ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு ?

விகிதாசாரத் தேர்தலில் ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு ?

மாவட்ட விகிதாசார தேர்தல் முறை.

உதாரணமாக 7 ஆசனங்களைக் கொண்ட குறித்த ஒரு மாவட்டத்தில் A, B, C, D, E, F, G. H ஆகிய கட்சிகள் போட்டியிட்டு அக்கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் பின்வருமாறு-

மாவட்டத்தில் அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகள் -400,000.

A- 140,000
B- 110,000
C- 52,500
D- 30,000
E- 27,500
F- 17,500
G- 12,500
H- 10,000

தற்போது முதலாவது ஆசனம் மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். அதனை போனஸ் ஆசனம் என்றும் சொல்லப்படும். இதனடிப்படையில் கட்சி A ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும்.

அடுத்து வெட்டுப்புள்ளி

5% என்ற வெட்டுப்புள்ளிக்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சியின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதனடிப்படையில்.

400,000 x 0.05 = 20,000

எனவே 20,000 இற்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சிகள் F,G,H பெற்றுக்கொண்ட வாக்குகள் கணக்கெடுக்கப்படாது. போனஸ் ஆசனம் போக மீதம் உள்ள 6 ஆசனங்கள். இவை கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரிக்கப்படும். தொடர்ந்து போட்டியில் இருக்கும் கட்சிகளின் மொத்த வாக்குகள்

140,000, 110,000, 52,500, 30,000, 27,500 = 360,000

எனவே ஒரு ஆசனத்தை பெறத் தேவையான வாக்குகள் 360,000/6 = 60,000

முதல் சுற்று

முதல் சுற்றில் 60,000 வாக்குகளுக்கு ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும். அதன் படி

கட்சி A-2 ஆசனங்கள்

140,000 – 120,000 = 20,000 மீதி

கட்சி B – 1 ஆசனம்

110,000 – 60,000 = 50,000 மீதி

ஏனைய C, D, E கட்சிகளுக்கு 60,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் கிடைக்காது. இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாக கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும். இது வரை

A-1(போனஸ்), 2 ஆசனங்கள்
B-1 ஆசனம்

மொத்தமாக 4 ஆசனங்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதம் 7-4=3 ஆசனங்கள் மீதம் உள்ளன.

இரண்டாம் சுற்று
(மீதி வாக்குகள்)

A-20,000
B-50,000
C-52,500
D-30,000
E-27,500

இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும்.

C-52,500 ஒரு ஆசனம்
B-50,000, ஒரு ஆசனம்
D-30,000 ஒரு ஆசனம்

இறுதி முடிவு

கட்சி A- 1+2+0= 3 ஆசனங்கள்
கட்சி B- 1+1=2 ஆசனங்கள்
கட்சி C- 0+1=1 ஆசனம்
கட்சி D- 0+1=1 ஆசனம்
கட்சி E- 0+0=0

நன்றி – டானியல்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top