News

ஐ.நா.வில், பாலஸ்தீனத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா.வில், பாலஸ்தீனத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ .நா.வில், பாலஸ்தீனத்தின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கான UAEஇன் தீர்மானம் 10.05.2024 வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, 143 நாடுகளின் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. Czechia, Hungary, Argentina, Micronesia, Nauru, Palau, Papua New Guinea, Israel, America ஆகிய ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன.

Albania, Austria, Bulgaria, Canada, Croatia, Fiji, Finland, Georgia, Germany, Italy, Latvia, Lithuania, Malawi, Marshall Islands, Monaco, Netherlands, North Macedonia, Paraguay, Republic of Moldova, Romania, Sweden, Switzeland, Ukraine, United Kingdom, Vanuatu ஆகிய 25 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது.

பாலஸ்தீன் 2012 முதல் ஐநா பொதுச் சபையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

தற்போது பலஸ்தீன் பார்வையாளர் அந்தஸ்து என்ற நிலையைக் கடந்து உறுப்பு நாடுகள் வரிசையில் அகரவரிசை ஒழுங்கில் அமரப்போகின்றது. மேலும் விவாதங்களில் முழுமையாகப் பங்கேற்கவும் நிகழ்ச்சி நிரல்களை முன்மொழியவும் பலஸ்தீன் பிரதிநிதிகளை குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கவும் முடியும்.

முழு உறுப்பினர் ஆவதற்கும் வாக்களிப்பு உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கும், பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும். அதுவும், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகிக்காமல் விட்டால்தான் பலஸ்தீன் இவ் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும்.

கடந்த மாதம் பலஸ்தீனை ஒரு நாடாக ஐநாவில் அங்கீகரிக்கக் கோரி அல்ஜீரியாவினால் பாதுகாப்புச் சபையில் கொண்டுவந்த தீர்மானத்தை அமெரிக்கா தமது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாடுகளில் போராட்டம் நடத்தியவர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் ஐநா வின் பலஸ்தீன் தூதுவர் நன்றியினைத் தெரிவித்தார். “பாலஸ்தீனத்திலும், உலகம் முழுவதிலும், கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்திலும் எங்கள் கொடி உயரமாகவும் பெருமையாகவும் பறக்கிறது. இது சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட அனைவராலும் ஒரு அடையாளமாக மாறியுள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.

– – – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் செய்திகள் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top