Sri Lankan Muslim

பாரம்பரியம்.

பாரம்பரியம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்புச் செய்த முதிய ஓய்வு பெற்ற கலைஞர்கள் மறைந்த கலைஞர்களின் குடும்ப உறுப்பினர்களை நிலையக் கலையகம் வரச் செய்து அவர்களது கலைப் பயணங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சி மூலம் வெளிக் கொணர்கிறார் சகோதரர் கலாபூஷணம்
எம்.எஸ்எம்.ஜின்னாஹ்.
இது மறைந்தோரை ஞாபகப் படுத்துவதும் வாழ்வோரை வாழ்த்துவதுமாக அமைகிறது.

அந்த வகையில் சென்ற
06/10/2020 அன்று செவ்வாய்க்கிழமை
முஸ்லிம் சேவைக்கு பங்களிப்புச் செய்த கலாபூஷணம் அல்ஹாஜ் மௌலவி J.மீராமொஹிதீன்
(கபூரி) B.A அவர்கள் நிலையக் கலையகம் வந்து பாரம்பரியம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை கலாபூஷணம் சகோதரர்
எம்.எஸ்.எம்.ஜின்னாஹ்.
அவருடன் கலந்துரையாடல்
செய்தார்.

இவர் மௌலவி மாத்திரம் அன்றி கல்விமானாகவும்
திகழ்கிறார். முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஆராய்ச்சி
அதிகாரியாகவும் பிரதிப்
பணிப்பாளராகவும் பதில்
பணிப்பாளராகவும் கடமை
புரிந்துள்ளார். இவர் எழுத்தாளர்
பேச்சாளர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

வாழும் போதே வாழ்த்த
வேண்டும் என்ற ரீதியில்
“வாழ்வோரை வாழ்த்துவோம்”
என்று முன்னாள் அமைச்சர்
மர்ஹூம் அஸ்வர் அவர்களால்
முஸ்லிம் கலைஞர்களை
வாழ்த்தி பட்டம் வழங்கப்பட்டது
பலரும் அறிந்ததே.
அந்த பட்டங்களை தமிழிலிருந்து அரபு மொழிக்கு
மொழி பெயர்த்தவர்
இந்த J.மீரா மொஹிதீன்
ஹஸ்ரத் தான். தற்போது
அரச அங்கீகாரம் பெற்ற
மொழி பெயர்ப்பாளராக
பணியாற்றுகிறார். முதலில்
மார்க்க கல்வியை கற்று
பின்னர் உலக கல்வியையும்
கற்று B.A பட்டமும் பெற்றார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் கிரா அத், குர்ஆன்
சிந்தனை, ஸஹர் துஆக்கள்
மணிமொழிகள், அதிகமான
உரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை
நடத்தியுள்ளார்.

இப்படி ஆளுமை நிறைந்த நம் முன்னோர்களை அடையாளம் காட்டுவதோடு இளம் சமூகத்தினருக்கு படிப்பினையூட்டி வழிகாட்டுவதற்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சி முன் நிற்கின்றது.
முன்னைய தலைமுறையினரின்
ஆளுமைகளை இந்த தலைமுறைக்கு பாரம்பரியம்
கொண்டு வந்து சேர்க்கிறது என்று சொன்னாலும் மிகையாகாது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும். பாரம்பரியம் நிகழ்ச்சியில் நேர்காணல்
செய்யும் சகோதரர் கலாபூஷணம் எம்.எஸ.எம்.
ஜின்னாஹ் அவர்களுக்கும்.
நிகழ்ச்சியை தொகுத்தளித்த
சகோதரி பாத்திமா ரினூஸியா அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரம்பரியம் நிகழ்வுமேடை nikalvumedai

 

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top