Musilm

ஒலுவிலின் முதல் பேராசிரியரானார் கலாநிதி S.M. ஐயூப் அவர்கள்..

ஒலுவிலின் முதல் பேராசிரியரானார் கலாநிதி S.M. ஐயூப் அவர்கள்..

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூகவியல் துறைத் தலைவருமான கலாநிதி SM. Iyoob அவர்கள் 2019.11.23 ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் சமூகவியல் துறைப் பேராசிரியராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (பல்கலைக்கழக பேரவையினாலும்) பதவியுயர்த்தப்பட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

சீனிமுஹம்மது – ஆமினா உம்மா தம்பதிகளுக்கு, ஒன்பது சகோதர சகோதரிகளுக்குப் பின்னர் பிறந்த கடைக்குட்டியான ஐயூப், இயல்பாகவே அமையப் பெற்ற சுறுசுறுப்பு மிகுந்த மாணவனாக க. பொ. த (சா/த) வரை ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய த்தில் கல்வி கற்றார்.
பின்னர் புகழ்பூத்த இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவில் தனது கபொத (உ/த) கல்வி, இஸ்லாமிய கற்கைகளில் பட்டப்படிப்பு ஆகியவற்றைப் பூர்த்தி செய்தார்.
1997இல் க. பொ. த(உ/த) பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 1st Rank எடுத்து சித்தியடைந்தவர்.

அதன் பின்பு ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து வித்தியாசமான ஒரு துறையான சமூகவியல்(Sociology) துறையில் பட்டப்படிப்பினைத் தொடர்ந்தார். அதில் முதல் பிரிவில் சித்தி (1st class) பெற்றதுடன் சிறந்த மாணவனுக்கான தங்கப்பதக்கம் கிடைத்தமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

இதனைத் தொடர்ந்து தெ. கி. பல்கலைக்கழக விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.

பல்கலைக்கழக புலமைப்பரிசில் பெற்று இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2017ல் தனது கலாநிதிப் பட்டத்தையும் பூர்த்தி செய்தார்.

ஐயூப் தனது சொந்தக் கிராமமான ஒலுவில் ஊரின் முதலாவது பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற மகுடத்துக்குச் சொந்தக்காரர்.

இப்போது ஒலுவிலின் முதலாவது பேராசிரியராகவும் சிம்மாசனம் ஏறிக் கொள்கிறார். பேராசிரியர் ஐயூப் கல்வித் துறையில் மாத்திரமன்றி இலக்கிய உலகிலும் கோலோச்சுபவர். சிறந்த கவிஞர், இலக்கிய விமர்சகர், இலக்கிய சுவை ததும்பும் பேச்சாளர், நகைச்சுவை கலந்த விவாதி என பல வடிவங்களில் ஐயூப் இலக்கிய வானிலும் பிரகாசிக்கிறார். பேசினால், விரிவுரை செய்தால் பல மணி நேரங்கள் அலுப்பின்றி செவிமடுத்திட முடியுமானவையாக அவற்றை அமைத்துக் கொள்வது கலாநிதி ஐயூபுக்கு கைவந்த கலையாகும். தான் எவ்வளவு உயர்ந்தாலும் சாதாரண மக்களுடன் பழகும் பணிவு கலந்த பண்பும் எளிமையும் புன்னகை மாறாத மலர்ந்த முகமும் பிறருக்கு உதவும் தயாள குணமும் மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கதைக்கும் இலாவகமும் ஐயூபை அலங்கரிக்கும் அணிகலன்களாகும். இவரது உயர்வினால் இவரது சகோதரர் கள் உறவினர்கள் மாத்திரமன்றி இவர் கல்விகற்ற நிறுவனங்களும் முழு ஊரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றன. Alhamdulillah

الحمد الله

Abdur Raheem

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top