Mali ஆபிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள எட்டாவது பெரிய நாடாகும்.
உலகின் மிகப் பெரிய மண்ணிலாலான கட்டிடமான Djenne பெரிய பள்ளிவாசலின் சுவர்களை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, கூழான களி மண்ணைக் கொண்டு செப்பனிட்டு வருகின்றனர்.
மண், நீர், தவிடு, நல்லெண்ணெய் மற்றும் baobab தூள் ஆகியவற்றிலாலான கலவையை தயாரித்து . . . முழுச் சமூகமும் பள்ளிவாசலின் கட்டுமானப் பணியில் ஈடுபடுகின்றது. இக் கலவையினால் தயாரிக்கப்பட்ட பள்ளிவாசல் கட்டிடம், மழையினால் ஏற்படும் அரிப்பு மற்றும் வெப்பமான காலநிலையால் ஏற்படும் விரிசல் மற்றும் பிளவுகளில் இருந்து கட்டிடத்தைப் பாதுகாக்கின்றது.
Djenne நகரம் மற்றும் Timbuktu பிரதேசம் ஆகியன, ஆபிரிக்காவில் இஸ்லாம் ஆழமாக ஊடுருவ செல்வாக்குச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13ஆம் நூற்றாண்டிலிருந்து, மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரை மற்றும் மத்திய கிழக்கு வரை நீண்டுகொண்டிருக்கும் முக்கிய வர்த்தகப் பாதைகளுடன் இணைக்கப்பட்ட வணிக மையமாக Djenne நகரம் மாறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…