Sri Lankan Muslim

ஓட்டமாவடி மஜ்மா நகர் பைத்துல் ஹைராத் பள்ளிவாசல் திறப்பு

ஓட்டமாவடி மஜ்மா நகர் பைத்துல் ஹைராத் பள்ளிவாசல் திறப்பு

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமையப் பெற்றுள்ள கொரோனா மையவாடியில் புதிதாக நிர்மாணம் பெற்ற “பைத்துல் ஹைரா” பள்ளிவாசலும் அதனுடன் கூடிய பல்தேவை கட்டட தொகுதியும் கடந்த நேற்றுமுன்தினம் (01) மாலை பி.ப 3.20 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த ஹாஜியானி மர்ஹுமா இரீபதுல் ஹைராவின் ஞாபகார்த்தமாக அவரது கணவர் ஏ.இஸட்.எம் ஸவாஹிர் ஹாஜியார் மற்றும் அவரது பிள்ளைகள், குடும்பத்தினரால் பல இலட்சம் ரூபாய் செலவில் இப்பள்ளியும் கட்டடமும் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அஸர் தொழுகையோடு பள்ளிவாசல் திறக்கப்பட்டதோடு சீனன்கோட்டை பள்ளிவாசல் மு அத்தின் ஸஹ்ரான் முர்ஸி அதான் நிகழ்த்தினார். பள்ளிவாசல் வக்ஃபு செய்யப்பட்டு அதற்குரிய சாவி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றினால் மரணித்து அங்கு அடக்கம் செய்யப்பட்டோருக்காக குர்ஆன், துவா பிரார்த்தனையும் இடம் பெற்றதோடு கலரா திக்கு மஜ்லிஸும் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும். கொரோனா ஜனாஸாக்களை இரவு பகல் பாராது அடக்கம் செய்வதில் தியாகத்தோடு அர்ப்பணிப்புச் செய்த அனைவருக்கும் பணியாளர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் கையளிக்கப்பட்டன.

ஸவாஹிர் ஹாஜியாரின் குடும்பத்தினரால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எம். ஷிஹாப்தீன் அவர்களுக்கு விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

(பேருவளை பீ.ம்.முக்தார்)

– – – – – – – – – – – – – – – – – – –

மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.

Nikalvumedai

நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்து செய்திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top