சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் கனசதுர வடிவுள்ள கட்டிடம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கஃபாவை ஒத்திருப்பதனால் முஸ்லிம்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman அவர்கள் New Murabba Development Company யின் கட்டிட திட்டத்தினை அறிவித்துள்ளார்.
இந்த பாரிய கட்டிட வளாகத்தில் பூங்கா, பொதுமக்களுக்கான நடைபாதை, அருங்காட்சியகம், Technology and Design University, பாரிய படமாளிகை மற்றும் பொழுதுபோக்கு வினோத அம்சங்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரும் நவீன நகரமாக இவ் New Murabba திட்டம் திகழும் என நம்பப்படுகின்றது. 19 km2 சதுரப் பரப்பில் அமையவுள்ள இந் நகரம், அமெரிக்காவின் Jersey நகரத்தின் 1/2 பங்கு அளவுடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“இது ஜாஹிலியாக்காலத்தை (அறியாமை) நினைவூட்டுகின்றது. இது ஷைத்தானியத்திற்கு குறைவானது அல்ல.” என்று எழுளத்தாளரான Aksum என்பவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்டத்திலேயே இத் திட்டம் வாதப்-பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
– – – – – – – – – – – – – – – – – – – –
முஸ்லிம் உலகின் செய்திகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group உடன் இணைந்திருங்கள்…