பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாராளுமன்றத்திற்கு கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்து நீதித்துறையின் அதிகாரங்களை கனிசமான அளவில் குறைத்துக் கொள்ளும் சட்டமூலம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் நிறைவேற்றப்பட்டது.
நெதன்யாகுவின் இப் புதிய சட்டத்தால் இஸ்ரேலின் ஜனநாயகம் கடும் சவாலுக்கு உள்ளாகும், நீதித்துறை பலவீனமடையும் என்பதை வலியுறுத்தி இச்சட்டமூலத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்து, வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நெதன்யாகுவின் அரசாங்கம், நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் மற்றும் காஸாவில் தற்போதைய போரால் ஆழ்ந்த அதிருப்தி அடைந்துள்ளது. இஸ்ரேலிய அரசியல் வரலாற்றில் ஒரு வலதுசாரி அரசாங்கம் இத்தகைய கதியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களால், இஸ்ரேல் மக்கள் அரசை வெளியெற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
– – – – – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…