நாளுக்கு நாள் Iஸ்ரேலியர்கள் போருக்காக தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். அவர்கள் Iஸ்ரேல் அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான போரை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
முதற்கட்டமாக Isரேலிய அரசுக்கெதிராக, Isரேலியர்கள் பேரணிகளை ஏற்பாடுசெய்து வருகின்றனர்.
இரண்டு யூத சியோனிச எதிர்ப்பு குழுக்களால் இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்கள் உடனடியாக போர்நிறுத்தம் கோரி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்வதாக உறுதியளித்தனர்.
காசா மீதான இனஅழிப்புப் போரை முடிவுக்கு கொண்டு வர அழைப்பு விடுத்து, முற்றுகையிடப்பட்ட பகுதியில் Isரேல் தொடுத்துள்ள போரை நிறுத்தக்கோரி வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் கட்டிடத்திற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான யூத எதிர்ப்பாளர்கள் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்டனர்.
‘Jewish anti-Zionist groups’, ‘Jewish Voice for Peace’ ஆகிய இரண்டு யூத அமைப்புக்களால் இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
“வன்முறையின் வேர் அடக்குமுறையாகும், எங்கள் பெயர்களில் அது இல்லை என்று சொல்ல நாங்கள் இங்கே இருக்கிறோம், ”என்று Jewish Voice for Peace என்ற யூத அமைப்பு X இல் (Twitter இல்) செய்தி வெளியிட்டுள்ளது.
“பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடந்து வரும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தும் சக்தி எங்களிடம் உள்ளது. காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு இனப்படுகொலை செய்து வருவதை கண்டிக்கின்றோம். அதனை தடுத்து நிறுத்துவோம்.” என்ற கோசத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களின் கோரிக்கைகளையும் யூத அமைப்புக்கள் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சந்தர்ப்பத்தில் 500 யூத அமைப்பாளர்கள் வாஷிங்டன் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இதே நேரம், Isரேலுக்குள்ளும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…