ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும், ரஷ்யாவில் 90% க்கும் அதிகமான முஸ்லிம்கள் Sunni முஸ்லிம்களாவர். சுமார் 10% அல்லது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான Shiite Muslimsகளும் ரஷ்யாவில் வாழ்ந்து வருகின்றனர்.
இன ரீதியாக…
Russian 77.7%
Tatar 3.7%
Ukrainian 1.4%
Bashkir 1.1%
Chuvash 1%
Chechen 1%
Other 10.2%
Unspecified 3.9%
என பல இனக்குழுக்கள் ரஷ்யாவில் காணப்படுகின்றன.
வரலாறு
7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் Caucasus பகுதியில் காலூன்றியதாக வரலாறு காணப்படுகின்றது. 8 ஆம் நூற்றாண்டில் Dagestani மக்கள் இஸ்லாத்திற்கு மாறிய பின்னர் தற்போதைய ரஷ்ய எல்லைக்குள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவில் முதல் முஸ்லிம்களின் ஆள்புலத்திலுள்ள State ஆக Volga Bulgaria காணப்படுகின்றது.
ரஷ்யாவின் சட்ட அங்கீகாரத்தின் கீழும் அரசியல் தலைவர்களாலும் ரஷ்யாவின் பாரம்பரிய மதங்களில் ஒன்றாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘Orthodox Christianity’ மதத்துடன்
இஸ்லாமும் ரஷ்யாவில் காணப்படும் பெரிய ஒரு மதமாக காணப்படுகின்றது.
கி.பி 922 ஆம் ஆண்டில் Volga Bulgariaவில் இஸ்லாம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது.
Tsarist ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, சோவியத் யூனியன் அரசு நாத்திகக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது இஸ்லாம் மற்றும் ஏனைய மத அனுஷ்டானங்களுக்கு தடையாக அமைந்தது. மேலும் பல்வேறு முஸ்லிம் தலைவர்களை தூக்கிலிடவும் ஒடுக்கவும் வழிவகுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ரஷ்ய அரசியலில் இஸ்லாம் ஒரு மதிப்புமிக்க, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இடத்தை மீண்டும் பெற்றது.
(US Department of State) அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள தகவலின்படி,
2017 ஆம் ஆண்டில் ரஷ்யாவில்
14 மில்லியன் முஸ்லிம்கள் அல்லது மொத்த மக்கள்தொகையில் சுமார் 10% ஆக காணப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட Chechnya, Ingushetia ஆகிய பிரதேசங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய முஸ்லிம்களின் ஆன்மீக நிர்வாகத்தின் தலைமை முஃப்தியின் ஆலோசகர் Talib Saidbaev, ரஷ்யாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் காணப்படலாம் என்று மதிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய சமூக அமைப்புக்கள்.
1. The Council of Muftis of Russia
இது 2-July-1996 இல் ரஷ்ய தலைநகர் Moscow வில் நிறுவப்பட்டது. கவுன்சிலின் தலைவர் ரஷ்யாவின் முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவராவார்.
2. Orenburg Muslim Spiritual Assembly
இது ரஷ்ய (மன்னர்) சாம்ராஜ்யத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்த மத நிர்வாகமாக காணப்பட்டது.
Siberia, Volga-Ural region மற்றும் Kazakh புல்வெளி உட்பட மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் இஸ்லாமிய நடவடிக்கைகளின் சில அம்சங்கள் மீது அதிகார வரம்பைக் கொண்டிருந்தது. இவ் அமைப்பு 1788 இல் ரஷ்ய பேரரசி Catherine II ஆணைப்படி நிறுவப்பட்டதாகும்.
3. The Muslim Spiritual Authority in the Caucasus
இது வடக்கு Caucasus உள்ள முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.
ரஷ்யாவில் காணப்படும் பிரதான மஸ்ஜித்கள்.
Moscow Cathedral Masjid
ரஷ்யாவின் தலைநகர் Moscow வில் காணப்படும் முக்கிய மஸ்ஜித் ஆகும். இது நகரின் மையத்தில் உள்ள Olympic மைதானத்திற்கு அருகில் Olimpiysky Avenue வில் அமைந்துள்ளது. கட்டிடக் கலைஞர் Nikolay Zhukov வடிவமைப்பின்படி 1904 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பின்னர் சில புனரமைப்புகளுக்கு உட்பட்டுள்ளது. இம் மஸ்ஜித் “Tatar Mosque” என்றும் அழைக்கப்படுகின்றது.
Kul Sharif Mosque
Kazan Kremlin இல் அமைந்துள்ள Kul Sharif மஸ்ஜித் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலத்தில் ரஷ்யாவிலும், துருக்கி-இஸ்தான்புல்லுக்கு வெளியே ஐரோப்பாவிலும் மிகப்பெரிய மஸ்ஜித்களில் ஒன்றாகக் காணப்பட்டது. இந்த மஸ்ஜித் இஸ்லாத்தின் அருங்காட்சியகமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்யும் இடமாகவும் இம் மஸ்ஜித் விளங்குகின்றது.
Lala Tulpan Mosque
Ufaவில் உள்ள Lala Tulpan மஸ்ஜித் 53 மீட்டர் உயரமுள்ள இரட்டை மினராக்களைக் கொண்ட ரஷ்யாவின் மிகப்பெரிய மஸ்ஜித்களில் ஒன்றாகும். இந்த மஸ்ஜித்தில் 1000 பேர்வரை வணக்க வாழிபாடுகளில் ஈடுபடும் வசதி காணப்படுகின்றது. இம் மஸ்ஜித் 1990-1998 க்கு இடைப் பகுதியில் Wakil Davlyatshin என்பவரால் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டது. 2001 இல் ரஷ்ய அதிபர் Vladimir Putin, Talgat Tadzhuddin மற்றும் பிற முஸ்லிம் அறிஞர்களுடன் இம் மஸ்ஜித்தில் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Saint Petersburg Mosque
1913 இல் Saint Petersburg மஸ்ஜித் திறக்கப்பட்டபோது, 49 மீட்டர் மினராவும், 39 மீட்டர் உயரமான குவிமாடத்துடன் துருக்கிக்கு வெளியே ஐரோப்பாவின் மிகப்பெரிய மஸ்ஜித்தாக காணப்பட்டது. இம் மஸ்ஜித் Saint Petersburg நகரத்தில் அமைந்துள்ளதோடு, ஐயாயிரம் பேர் வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் வண்ணம் விசாலமானதாகும்.