நோர்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தன.
2024 May 28 முதல்
அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன் அரசை முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த முடிவானது இஸ்ரேலுக்கு எதிரானதோ அல்லது ஹமாஸுக்கு ஆதரவானதோ அல்ல… இது நிரந்தர அமைதி, சமாதானத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு என ஸ்பெயினும் அயர்லாந்தும் அறிவித்துள்ளன.
இவ் அறிவிப்பைத் தொடர்ந்து… அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள தம் நாட்டுத் தூதுவர்களை திருப்பி அழைப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நோர்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளின் பலஸ்தீன் அங்கீகார முடிவை.. ஹமாஸ் மற்றும் பலஸ்தீன் அதிகார சபை என்பன வரவேற்றுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பகுதிகளில், இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவிவருவதை சர்வதேச நாடுகள் சட்டவிரோதமானவை என்று கருதிவரும் நிலையில் பலஸ்தீனுக்கான அங்கீகாரம்… நோர்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன அரசை ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 143 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (விபரம் Click)
– – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் செய்திகள் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.