ஹிஜ்ரி 133 என்றால் அனஸ் இப்னு மாலிக் (ரழி) மரணித்து 40 வருடங்களுக்குப்பின், நபியவர்களை கண்ணால் கண்ட கடைசி நபித்தோழர் மரணித்து 23 வருடங்களுக்கு பின், இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹி) மதீனாவிலும் இமாம் அபூ ஹனீஃபா (ரஹி) கூஃபாவிலும் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில், இமாம் ஷாபி (ரஹி) இமாம் புஹாரி (ரஹி) போன்றவர்கள் பிறப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்..
ஹிஜ்ரி 133 ரபீஉல் அவ்வல் மூன்றாம் நாள் மரணித்த ஒருவரை அடக்கம் செய்த இடத்தில் இருந்த நடுகல்லும், ஹிஜ்ரி 135 ஆம் ஆண்டு மரணித்த ஒருவரை அடக்கம் செய்த இடத்தில் உள்ள நடுகல்லும்தான் இந்த இரண்டு படங்களும்.
மாவனல்லை, ஹெம்மாதகமைக்கு அருகில் உள்ள மடுல்போவ மஸ்ஜித் வளாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று அங்கு சென்றிருந்த நேரம் அவற்றை படம்பிடிப்பதற்கான வாய்ப்பு ஒன்று அமைந்தது.
இந்த கல்லின் காலத்தை தொல்பொருளியல் முறைமை ஊடாக ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.
இஸ்லாத்தின் தூது ஆரம்ப நாட்களிலேயே இலங்கைக்கு கிடைத்திருக்கிறது.
ஹுஸ்னி ஜாபிர்
2022-10-30
கல் எளிய, இலங்கை.