அமெரிக்க வெளியுறவுத் திணைக்கள அதிகாரி ராஜினாமா.
அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தில் பணியாற்றிய அரபு மொழி செய்தித் தொடர்பாளர், தமது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஹாலா ராரிட் என்பவரே இவ்வாறு ராஜினாமா செய்துள்ளதுடன் வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேட்டியும் அளித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கிவருவதானது காசாவில் மனிதாபிமானத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது. மேலும் மத்திய கிழக்கினதும், அரபு உலகினதும் கோபத்தையும் வாஷிங்டன் சம்பாதித்து வருகின்றது.
வெளியுறவு அமைச்சில் உள்ள இராஜதந்திரிகள் உத்தியோகபூர்வ கொள்கையுடன் முரண்படும் கருத்துக்களை வெளிப்படுத்த பயப்படுகிறார்கள்.
உலகில் காசாவில் இறந்த குழந்தைகளின் படங்கள் பரவி வருகிறது. குழந்தைகளின் இறந்த படங்களையும் தினமும் பார்ப்பது வழக்கம். ஒரு நபராக, ஒரு தாயாக அவற்றை எப்படி பார்ப்பது ? இந்தக் குழந்தைகளைக் கொன்றது எங்கள் குண்டுகள்தான் என்று தெரிந்ததும் பேரிடியாக இருந்தது.
மிகவும் அழிவுகரமான விஷயம் என்னவென்றால், அவர்கள் கொல்லப்பட்டாலும் நாங்கள் இன்னும் அதிக ஆயுதங்களை அனுப்புகிறோம் என்பதை அறிவதுதான்.
வெளியுறவுத்துறைக்குள் கொள்கை பற்றிய கவலைகளை வெளிப்படுத்துவது முடியாத காரியம் என்று அவர் தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
– – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் செய்திகள் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…