காசா பற்றிய அவரது சமீபத்திய கருத்துக்கள் உலகளாவிய கண்டனத்தைப் பெற்ற பிறகு,
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், Truth Social இல், ஒரு இடுகையில்,
காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது மற்றும் பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தனது திட்டத்தைப் பற்றிய சில விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
‘போரின் முடிவில் காசா பகுதி இஸ்ரேலால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசான் மக்கள் ‘இப்பகுதியில் புதிய மற்றும் நவீன வீடுகளுடன் மிகவும் பாதுகாப்பான மற்றும் அழகான சமூகங்களில் தேர்ந்தெடுக்குப்பட்டவர்கள் மீள்குடியேற்றப்பட்டிருப்பார்கள்’ என்று அவர் கூறினார்.
