👆🏻 இதனைக் click செய்து இப்போதே பதிவுசெய்துகொள்ளுங்கள்…
(அதிக நெறிசல் காரணமாக link தொடர்பு கிடைக்காமல் போகலாம்)
எரிபொருள் விநியோகத்தை நெறிப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஒரு அடையாள அட்டை எண்ணுக்கு ஒரு வாகனம் பதிவு செய்யப்பட்டு, வாகனத்தின் சேஸ் எண் உள்ளிட்ட பிற விவரங்களைச் சரிபார்த்த பிறகு, அந்தந்த வாகன உரிமையாளருக்கு QR குறியீடு வழங்கப்படும்.
வாகனப் பதிவு எண் மற்றும் QR குறியீட்டின் கடைசி இலக்கத்தின்படி, எரிசக்தி அமைச்சர் வாரத்திற்கு 02 நாட்களை எரிபொருளைப் பெறுவதற்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட உள்ளது.
மக்கள் இப்போது பதிவு செய்யலாம், அது எப்போது செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்‼️