ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் பற்றிய ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான பிரான்செஸ்கா அல்பானீஸ், August -10- காலை அல்-தபின் பள்ளி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் பாரிய இரத்தக்களரிக்கு உலகின் “அலட்சியம்” என குறிப்பிட்டு, கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்கிறது என அல்பானீஸ் X பக்கத்தில் ஒரு இடுகையில் எழுதினார்.
“சர்வதேச சட்டத்தின் மிக அடிப்படையான அர்த்தத்திற்கு மதிப்பளித்து, அவர்களைப் பாதுகாக்க எங்களின் கூட்டு இயலாமைக்காக பாலஸ்தீனியர்கள் எங்களை மன்னிக்கட்டும்.”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.