துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் சுபஹ் தொழுகையில் ஈடுபட எதிர்பார்த்திருந்த Kevin Soni என்ற கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார்.
அனர்த்தம் ஏற்பட்ட தினத்தில், அதிகாலை சுபஹ்நேர தொழுகைக்காக அந்த வீரர் காத்துக் கொண்டிருந்திருக்கின்றார்.
“நான் ஒரு முஸ்லிம், மார்க்கக் கடமைகளை தவறாமல் நிறைவேற்றுபவன்.. அனர்த்தம் ஏற்பட்ட தினமான பெப்ரவரி 6ஆந் திகதி காலை 6.40 மணிவரை தொழுதுவிட்டு இதர வணக்கங்களில் ஈடுபட எதிர்பார்த்திருந்தேன். அதனால் நான் இரவின் இறுதிப் பகுதியில் தூங்காமல் விழித்திருந்தேன்.” என்று Kevin Soni குறிப்பிட்டார்.
“எனவே, நான் தூங்கியிருந்தால், தங்கியிருந்த இடம் இடிந்து சுக்குநூறான விதத்தை நான் பார்க்கும்போது நிச்சயம் இறந்திருப்பேன். இடிந்து விழுந்த கற்களும், தூண்களும் பெரியவை. அத்துடன் நான் தங்கியிருந்தது… 17 மாடிக் கட்டடமாகும்.. நான் தூங்கியிருந்தால் நிச்சயம் இறந்திருப்பேன்…
நான் இதுவரை அனுபவித்திராத ஒரு சோதனை இது … எனக்குப் பக்கத்தில் மக்கள் இறப்பதைக் கண்டேன். நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்… வாழ்க்கை ஒரு நூலில் தொங்கிக் கொண்டிருக்கின்றது…” என்று மேலும் குறிப்பிட்டார்.
தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் February 6ஆம் திகதி உச்ச அளவாக, 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
அதிகாலை 4:17 மணிக்கு முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு முறையே 6.4 மற்றும் 6.5 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியிலும் சிரியாவிலும் 44,000 க்கும் அதிகமான மக்கள் மரணித்திருந்தனர். ———————————–
முஸ்லிம் உலகின் செய்திகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடையுடன் இணைந்திருங்கள்…