Muslim History

எகிப்து முஸ்லிம் உறவு.

எகிப்து முஸ்லிம் உறவு.

எகிப்து முஸ்லிம் உறவு.
இனத்துவம் கடந்தது
காலத்தால் முந்தியது….

யாப்பகுவ ராஜதானியை ஆண்ட 1ம் புவனேகபாகு எகிப்திய மம்லூகியர்களுக்கு 1283 களில் ஒரு கடிதம் எழுதினான். இலங்கையின் தூதுவர் அபு உஸ்மான் மூலம் இக்கடிதம் கையளிக்கப்பட்டது. “இலங்கை என்பது எகிப்தாகும் எகிப்து என்பது இலங்கையாகும். நான் அனுப்பும் தூதுவரை தொடர்ந்து எகிப்திலிருந்து ஒரு தூதுவர் இங்கு வருவதை நான் விரும்புகிறேன்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிஞர் சித்தி லெப்பையின் வரலாற்று சிறப்பு மிகு அசன்பே நாவலின் கதைக்களம் மிஸ்ரை மையப்படுத்தியது

ஸூரா யூஸுபை கண் முன் கொண்டுவரும்.

அறிஞர் அஸீஸ் அவர்களது மிஸ்ரின் வசியமும் அப்படித்தான்.

எகிப்து இலங்கை வரலாற்று உறவின் நீட்சி அரசியலையும் தாண்டியது என்பதைத்தான் அஸீஸ் எனும் பேரறிஞரின் வரலாற்றுப் பங்களிப்பும் பணியும் எடுத்துக்கூறுகிறது.

எகிப்து என்பது இலங்கை இலங்கை என்பது எகிப்து என இலங்கை மன்னன் கூறியதும் நோக்கத்தக்கது.

முதல் படத்தில்
எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒராபி பாசாவின் உருவப்படத்தை ஸாஹிரா வில் திரைநீக்கம் செய்கிறார் அஸீஸ்.

அடுத்து எகிப்தின் முன்னைநாள் ஜனாதிபதி ஜமால் அப்துல் நாஸரை சந்தித்து பேசுகிறார்.

அடுத்து
எகிப்து அல் அஸ்ஹர் கலாசாலை சேகுல் அஸ்ஹருடன்
அறிஞர் அஸீஸ் அவர்கள்.

இலங்கை வரலாற்றில் எகிப்து டனான உறவு காலத்தால் முந்தியது ஆத்மார்த்தமானது

அது
أم الدنيا உலகின் தாய்

இது உலகின் தந்தை
أبو الدنيا

பராக்கிரமபாகு முதல் நீளும் ரகசியம்.

அறிஞர் அஸீஸ் மிஸ்ரின் வசியம் எழுதியமை.

அறிஞர் சித்தி லெப்பை எழுதிய
அசன்பே சரித்திர நாவல் முழுவதுமாக
எகிப்து இந்திய பின்னணி சூழமைவை கொண்டது.

அதிலும் அல்குர்ஆன் கூறும் யூஸுப் ஸுலைஹா கதையை தழுவியது.

பின்னாட்களில்

மர்ஹூம் தாஸிம் நத்வி எழுத நினைத்த நூல் கூட
எழில்மிகு எகிப்து நாட்டிலே…. என்பதாக இருந்தது….

1970 களில் எகிப்தின் ஜனாதிபதி அப்துன்நாஸர் மரணித்த பொழுது இலங்கையில் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க எகிப்து சென்றார்.

எகிப்தின் வானொலி இரங்கல் நிகழ்ச்சி
இங்கு நேரடியாக
ஒலிபரப்பானது.

எகிப்து இலங்கை உறவு காலத்தால் ஆழ வேர்விட்டு வளர்ந்த உறவு….

✍🏻 M.M.A.BISTHAMY

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top