News

இப்படியும் நிகழ்ந்தது.

இப்படியும் நிகழ்ந்தது.

2023/09/25

2 மாத குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக தன்னைத் தானே ஆபத்தில் ஆழ்த்திக் கொண்ட மருத்துவரின் மனிதாபிமானம்

உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கண்டி மருத்துவமனை மருத்துவர் ஒருவர், 02 மாதக் குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில், குழந்தையை காப்பாற்றி விட்டு மருத்துவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் கண்டி மருத்துவமனையின் 4ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்ட மருத்துவர் பாஹிமா, பின்னர் இரத்த அழுத்தம் அதிகரித்து உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்து குழந்தையை மீட்ட பிறகு, இந்த மருத்துவர் பாஹிமாவின் நிலை மோசமடைந்ததால், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது இரத்த அழுத்தம் ஏற்கனவே 200 ஐ தாண்டியிருந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கண்டி அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் எனும் மருத்துவர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக தலையில் உள்ள நரம்பு வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – –

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top