News

ஜனாஸாக்களை எரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை – பாராளுமன்றத்தில் அறிவிப்பு.

ஜனாஸாக்களை எரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - பாராளுமன்றத்தில் அறிவிப்பு.

கொரோனா தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட கொரோனா குழு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18.07.2023) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கேள்வியெழுப்பிய ரவூப் ஹக்கீம் எம்.பி, “கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு கொரோனா குழு எடுத்த தீர்மானம் வைராக்கியமிக்க குற்றம். அதனால் இவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதனால் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட கொரோனா குழு அதிகாரிகள் மேற்கொண்ட தவறான தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள தயாரா?

ஏனெனில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு தீர்மானத்தை எடுக்காத நிலையில், பிழையான விஞ்ஞான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த அதிகாரிகள் தொடர்பாக குறைந்தபட்சம் அமைச்சரவை மட்டத்திலாவது விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? பிழையான தீர்மானம் மேற்கொண்ட குழுவின் அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறே நான் பகிரங்கமா கேட்கிறேன்” என்று ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top