ரமழான் நோன்பை முஸ்லிம்கள் நோக்காதிருப்பதற்காக உளவாளிகளைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் கண்காணிக்கப்படுவதாக சீனாவின் காவல்துறை தெரிவித்துள்ளது.
சாதாரண குடிமக்கள்,
பொலீஸார்,
மற்றும் சுற்றுப்புறக் குழுக்களின் உறுப்பினர்களாக 3 பிரிவுகளில் இவ் உளவாளிகள் காணப்படுவதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
“எங்களிடம் பல ரகசிய உளவாளிகள் உள்ளனர்.” என்று கிழக்கு பிராந்தியத்திலுள்ள Xinjiang Uyghur தன்னாட்சிப் பகுதியில் உள்ள Turpan பகுதி பொலிஸ் அதிகாரி ஒருவர் Radio Free Asia வானொலிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
“மொழித் தடையின் காரணமாக, Uyghurகளை கண்காணிக்க நாங்கள் Uyghurகளை நியமித்தோம்,” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். “எனது பணியிடத்தில், 70-80 Uyghur பொலீஸார் நேரடியாக உளவாளிகளாக வேலை செய்கிறார்கள் அல்லது மற்ற பொதுமக்களுள் கலந்துள்ள உளவாளிகளை வழிநடத்துகிறார்கள்.” என்று மேலும் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ரமழானின் போது Xinjiang உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க சீனா தடை விதித்தது. அப்போது அதிகாரிகள், தன்னிச்சையாக Uyghur முஸ்லிம்களை “மறு கல்வி” முகாம்களில் தடுத்து வைக்கத் தொடங்கினர்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஓரளவு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, 65 வயதுக்கு மேற்பட்டவர்களை மாத்திரம் நோன்பு நோக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
ஆனால், இவ் ஆண்டு (2023) வயது போன்ற எவ்வித மட்டுப்பாடுகளும் நோக்கப்படாமல் எந்தவொரு முஸ்லிமும் நோன்பு நோற்க தடைவிதிக்கப்பட்டது என்று Turpan நகர பொலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இவ் ஆண்டில் வீடுகளி தேடுதல், தெரு ரோந்து மற்றும் மஸ்ஜித்களி தேடுதல் ஆகியவையும் நடைபெறும் என்று அவ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் வீடுகளை சோதனை செய்யும் போது, அவர்கள் சட்டவிரோத மத நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா ? மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதை கண்காணிக்கின்றோம்.” என்று அரசியல் அதிகாரி மேலும் கூறினார்.
மீறுபவர்களுக்கு சிறிய குற்றங்களுக்கு சட்டக் கல்வியும், கடுமையான குற்றங்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றார்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…