News

உங்கள் கணினி, தொலைபேசிகள் எவ்வாறு Hack செய்யப்படுகின்றன ?

உங்கள் கணினி, தொலைபேசிகள் எவ்வாறு Hack செய்யப்படுகின்றன ?

கையடக்கத் தொலைபேசியில் இருந்த புகைப்படங்களை மர்மநபர் ஒருவர் கையகப்படுத்தி, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக விரட்டியதனால் யுவதி தற்கொலை முயற்சி . . .

தொலைபேசியூடாக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஒருவரது வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை வேரொருவர் கையாடல் . . .

இவைபோன்ற நிகழ்வுகள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன.

எமது தொலைபேசி மற்றும் கணினிகள் Hacker களால் ஊடுருவப்படுவதற்கு நாம்தான் பிரதான காரணம் என்பதை முதலில் உணருங்கள்.

30GB Free Data என்ற செய்திகள் உங்களை கடந்து செல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

30GB Free Data என்ற செய்திகள் உங்களை கடந்து செல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

பிரபல நிறுவனம் ஒன்று 25 ஆண்டுகால நினைவை முன்னிட்டு 1000 பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்கப்போகின்றது என்ற செய்தியுடனான link ஐ நீங்கள் கண்டிருப்பீர்கள். குறிப்பிட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் அல்லாமல் இவ்வாறான செய்திகளைக் கண்டால் உடனே உஜாராகிவிடுங்கள்.

இவை உங்களுக்காக வைக்கப்படும் எலிப்பொறிகளாகும். Hacker களால் இவ்வாறான ஆசை வார்த்தைகள் கூறப்பட்ட செய்திகளோடு கூடிய link கள் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் அந்த link ஐ அழுத்தும்போது எமது தொலைபேசி மற்றும் கணினி என்பவற்றின் கட்டுப்பாடுகள் அந்த link ஐ உருவாக்கியவரின் கட்டுப்பாட்டிற்குச் செல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவைபோன்ற செய்திகளைப் பெற்றுக்கொள்ள எமது Whatsapp குழுமத்தில் இணையுங்கள். 👇🏻 Click

நிகழ்வுமேடை Nikalvumedai

Joint With நிகழ்வுமேடை Whatsapp Group.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top