“கொழுத்திவிடு சத்தியத்தீ
கொழுந்து விட்டெரியெட்டும்!
அழுத்திச் சொல் அல்லாஹ்வே
அவனன்றி எவர்க்கும் அஞ்சோம்.
பழுத்த கலை ஞானங்கள்
பண்பு நிறை ஒழுக்கங்கள்
உளத்தினில் தூய ஈமான்
உள்ளவரை அச்சமேனோ?”
என்ற தாஸீன் நத்வியின் கவி வரிகள் பலருக்கு மனப்பாடம்.
‘கம்மல்துறை மறைதாசன்’ என்ற புனைபெயரில் அழகிய கவிதைகளை எழுதியவர். அவரது கவிதைகள் உள்ளத்தைத் தொடுவன.
எல்லாவற்றிற்கும் அப்பால், இலக்கிய ஈடுபாடும் ஆன்மீக ஞானமும் அறிவாழமும் ஒருங்கு சேர்ந்த மார்க்க அறிஞர் அவர்.
இலங்கை கண்ட மிகச்சிறந்த இஸ்லாமிய அறிஞர்களுள் மர்ஹூம் தாஸீன் நத்வியும் ஒருவர். இந்தியாவிலுள்ள ‘நத்வதுல் உலமாவிலும், எகிப்திலுள்ள உலகப் புகழ்பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலும் பயின்ற பேராளுமை அவர்.
1973 இல் ஆரம்பிக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யாவின் ஸ்தாபக அதிபர்.
அவர் மரணித்து மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இன்று அவரது வாழ்க்கை வரலாற்று நூல், அவரது பிறந்தகமான நீர்கொழும்பில் வெளியிடப்படுகிறது.
பெரிதும் மறக்கப்பட்டிருந்த ஒரு அறிஞரை, வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் அரிய பணி இது. அதற்காகவே இதில் பேச ஒத்துக் கொண்டேன்.
✨இடம்:
அல் பலாஹ் கல்லூரி
போருத்தோட்ட
கொச்சிக்கடை
நீர்கொழும்பு.
✨காலம்: 18.12.2022 இன்று
✨நேரம்: 3.30 மணி
‘கம்மல்துறை தந்த அறிஞர் யூ.எம்.தாஸீன்: வாழ்வும் பணியும்’ என்ற இந்தை நூலை அவரது சகோதரர் யூ.எம்.பஹுர்தீன் எழுதியுள்ளார்.
✨பிரதம அதிதியாக ஜாமிஆ நளீமிய்யாவின் கல்வித்துறைப் பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) கலந்து கொள்கிறார்.
✨வெளியீட்டுரை:
அதிபர் முஸ்தபா மஹ்ஸூர் Mullai Mushrifa
✨நூல் அறிமுக உரை:
அஷ்ஷெய்க் முனாஸ் (நளீமி) Munas Riyal
✨நூல் விமர்சன உரை: சிராஜ் மஷ்ஹூர் Siraj Mashoor
✨கவி வாழ்த்து: கவிஞர் கிண்ணியா அமீரலி
✨விசேட உரை: எம்.எம்.எம்.றெஸீன்
சிறப்புரை: எம்.எஸ்.எம்.முனவ்வர் (நளீமி).
வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
சிராஜ் மஷ்ஹூர்.
18.12.2022