அறபுமொழி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு
அறபுமொழி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது
மொழிக் கற்கைகளுக்கான ibrt எகடமியின் முதலாவது மெய்நிகர் பயிலரங்கு வெற்றிகரமாக நிறைவு பெற்றது அல்ஹம்து லில்லாஹ்.
‘அறபுமொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி’ எனும் தலைப்பிலான நான்கு வார இப் பயிலரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 40 அறபுமொழி ஆசிரியர்கள் பங்குபற்றினர்.
இப்பயிலரங்கை தாய்லாந்தில் அமைந்துள்ள Prince of Songkla University இன் இஸ்லாமிய விஞ்ஞானங்கள் பீட விரிவுரையாளரும் வெளிநாட்டு நிபுணரும் ‘அறபுமொழித் தரம்காண் பரீட்சைகள் மற்றும் ஆற்றல் விருத்தி நிலைய’த்தின் பிரதித் தலைவருமான கலாநிதி பி.எம்.எம். இர்பான் (PhD) ( நளீமி) நடாத்தினார்.
இக்கற்கைநெறி குறித்து பின்னூட்டங்களை பலரும் எமக்கு அனுப்பியிருந்தனர். அவற்றுள் சில
“இக்கற்கைநெறியூடாக தாய்மொழி அல்லாதவர்களுக்கு அறபைக் கற்பிப்பவர்களுக்கான தனித்துவமான ஆளுமையை அடையாளம் கண்டோம்.”
“எதிர்காலத்தில் அறபு மத்ரஸா நிர்வாக உறுப்பினர்களுக்கும் அதிபர்களுக்கும் இக்கற்கை நெறியின் முக்கியத்துவம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.”
“இந்த கருத்தரங்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக் கற்கைநெறியூடாக எனது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுவார்கள் என நம்புகிறேன்”
மொழிக் கற்கைகளுக்கான ibrt எகடமியானது, அறபு, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கற்கைநெறிகளையும், சேவைகளையும் வழங்கும் இலக்குடன் செயற்பட்டு வருகிறது.
மொழிப்பாடநெறிகள், மொழிபெயர்ப்புக் கற்கைகள், ஆசிரியர் பயிற்சி நெறிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பயிற்சி நெறிகள் போன்ற பல்வேறு நிகழ்சிகளை நடாத்துவதற்கு நிறுவனம் தீர்மானித்துள்ளதுடன், பாடத்திட்ட வடிவமைப்பு, மொழிபெயர்ப்புகள், மொழித்துறைசார் ஆலோசனைகள், ஆவண வடிவமைப்பு, மற்றும் மொழிச்செம்மையாக்கம் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கவும் தயாராகவுள்ளது.
தொடர்புகளுக்கு: https://wa.me/+94741401818
– – – – – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…