கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த A. Munsif Ahamed என்ற மாணவன், Karate – Kumite – 57kg பிரிவில் பல மட்டங்களிலும் போட்டியிட்டு மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று தனது பெற்றோருக்கும் பாடசாலைக்கும் இப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். புகைப்படங்களைப் பார்வையிட Click
A. Munsif Ahamed – பாடசாலையில் பல நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் மாணவன் என்பதுடன் அதிபர் ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்ற மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Muhammad Husain Alimroos, Muhammad Saheed Nasrin தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான A. Munsif Ahamed இற்கு
A.Musnif Ahmed,
A.Ayaan Ahmed ஆகிய இரு திறமையான சகோதரர்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம்
கல்முனை வலயப் பாடசாலைகளிலிருந்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் “Clours Award” நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக நிந்தவூர் அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை காஸிமி மண்டபத்தில் கல்முனை கல்வி வலய உடற்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் தலைமையில் 23.05.2023 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களை கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பொறியலாளர் ஏ.எம். ஸாஹிர், கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். ஜாபீர், எம்.எச்.றியாஸா, பீ. ஜிஹானா ஆலிப், என். வரணியா, ஏ.எச்.பௌஸ், உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலிக், உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ. அஸ்மா மலிக், என். சஞ்சீவன், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம். சரிபுதீன் உட்பட வலயக்கல்வி அலுவலக அனைத்து பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர். புகைப்படங்களைப் பார்வையிட Click.
நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…