இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், தமக்கு ஆரம்ப கல்வி அறிவளித்த பாடசாலையோடு இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாட்டை பழைய மாணவர் சங்கம் செய்துள்ளது.
இதனூடாக, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் பழைய மாணவர்கள் பாடசாலையுடனான தமது தொடர்பை பேணி பாடசாலையின்
வளர்ச்சியில் பங்கெடுக்க முடியும்.
இந்த அழைப்பினூடாக திரட்டப்படும் தகவல்களை வைத்து பழைய மாணவர்களின் பங்களிப்புடன் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஊக்குவிப்பு அளித்தல், க.பொ.த சாதாரண தர கல்வி நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுதல், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களை செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்காலத்தில் இணையழி கலந்துரையாடல்கள், ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடசாலையையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை செய்தல் உட்பட ஆக்கபூர்வமாக செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, சர்வதேச ரீதியில் பரந்து வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்விகற்ற பழைய மாணவர்கள் Al-Hilal Application Form (Click Here) லிங்கை கிளிக் செய்து தமது அங்கத்துவத்தினை இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியும்.
Proud to be a HILALIAN