Article

அல் ஹிலால் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…

அல் ஹிலால் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்...

 

இன்றைய தினம் கமு/கமு அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள், பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.அப்துல் மலிக் Sir அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலையின் பிரதான வாயிலில் இருந்து, மாணவர்கள் தேசிய கொடியினை உணர்வுபூர்வமாக ஏந்திய நிலையில், சுதந்திர தினத்தை அனுஷ்டித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களினால் வரையப்பட்ட ஆக்கங்கள் அடங்கிய சித்திரக் கண்காட்சியை, கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலிக் Sir அவர்கள் திறந்து வைத்தார்கள். மாணவர்களின் ஆற்றல்களை கோட்டக் கல்விப் பணிப்பாளர் உட்பட அனைவரும் வியந்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாகும். இம் மாணவர்களை வழிப்படுத்திய பகுதித்தலைவர்கள், ஆசிரியர்களை; பாடசாலையின் அதிபர் U.L நசார் Sir அவர்கள் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.

இதேவேளை, பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களினால், தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

அடுத்து, சுதந்திரதினம் தொடர்பான விசேட உரையினை, பாடசாலையின் அதிபர் ஜனாப் U.L. நசார் Sir அவர்கள் நிகழ்த்தினார்கள். பாடசாலையின் உதவி அதிபர் திருமதி. M.H. Nusrath Begum அவர்களினாலும் சுதந்திர தினம் தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டது.

சுதத்திரதினம் தொடர்பாக, மாணவர்களால் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டமை சிறப்பம்சமாகத் திகழ்ந்தது.

75 ஆவது சுதந்திரதின நிகழ்வில்…

திருமதி. U.L.S. Sarjuna
திருமதி. A. Thirosa Banu
திருமதி. A.S. Nihara
திருமதி. F.F. ABSAN BANU
திருமதி. R.R. SIFNAS
A.B. Aswer, A.L.M. Erzhad, M.S.M. Nuski ஆகிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அல்ஹிலால் வித்தியாலயத்தின் சுதந்திரதின நிகழ்வுகளின் புகைப்படங்களைப் பார்வையிட 👇🏻 click செய்யவும்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top