ஒக்டோபர் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீலாத் தினமாகும்.
மீலாத்தினத்தை முன்னிட்டு கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 10.10.2022 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றிய சிறப்புப் பேச்சு இடம்பெற்றது.
பிரதான காலைக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் இந்நிகழ்வினை வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப் U.L. நசார் சேர் அவர்கள் ஏற்பாடுசெய்திருந்தார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றிய சொற்பொழிவினை, மௌலவி S.A.M. ஜினான் (ஸஹ்தி) அவர்கள் நிகழ்த்தியிருந்தார்கள்.
அல்லாஹ்வின் நேசத்தை எதிர்பார்ப்பவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது நேசம் பாராட்ட வேண்டும் என்றும், … அகிலத்துக்கு அருட்கொடையாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தையும் மேற்கோள் காட்டி சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.
மேலும் ஸலாத்தைப் பரப்புவதனைப்பற்றியும், சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களாகிய நாம் ஆசிரியர்கள், பெற்றோருக்கு கீழ்ப்படிவதன் அவசியம் பற்றியும் மௌலவி S.A.M. ஜினான் (ஸஹ்தி) அவர்கள் உரைநிகழ்த்தியிருந்தார்கள்.
நாம் அனைவரும் பெருமானார் (ஸல்) அவர்களை முன்மாதிரியாக, ஒரு role-model ஆக கொள்ளவேண்டும் என்பதனையும் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்கள்.