Musilm

அறிந்துகொள்ளப்படாத ஹிஜாமாவின் நன்மைகள்.

ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة  lit. “sucking”) என்ற அரபி வார்த்தை  hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).

நபி ( ஸல்) அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( புஹாரி – 5678 )

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்  நபி(ஸல்) அவர்கள் ‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்’ என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது’ என வந்துள்ளது (புஹாரி – 5680)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.  (புஹாரி  – 5694 )

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். (புஹாரி  – 5695  )

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். (புஹாரி  – 5699 )

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களை கடக்கும் போது “ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள்” என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)

ஹிஜாமா (   حجامة     )    செய்தால் எற்ப்படும் பயன்கள்:

1. முதன்மையான பயனும், நன்மை என்னவென்றால் இது நபி (ஸலஃ)யின் வழிமுறை ( சுன்னத்), அதற்கான நன்மைகள் இவ்வுலகத்திலும், மறுமை நாளிலும் கிடைக்கும்.

2. இந்த ஹிஜாமா ( குருதி (அ) இரத்த உறுஞ்சுதல் மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து  Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

3. இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது.

4. ஹிஜாமா (حجامة ) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் ( Prevention better than cure).

5. ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற  நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.

6. ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 70% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும்.

7. நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிக நச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் ( Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் ( Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.

8. ஒவ்வோரு வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் சேகரமாகிய கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய  ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை ( Natural Biological Balance)  மேம்படுத்துவதன் மூலம் பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.

9.  இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது.

10. இம்முறையால் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells – RBC, WBC ), இரத்தப்புரதங்கள் ( Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை.

எந்த காலங்களில் ( நாட்களில் ) ஹிஜாமா ( حجامة   ) செய்யலாம்?

இந்த ஹிஜாமா இஸ்லாமிய காலண்டரான  சந்திர காலண்டர் படி ‘ஒற்றைப்படை’ நாட்களில் செய்து சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், குறிப்பாக  திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் நாட்களில் செய்து சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஹிஜாமா செய்வதை தவீர்த்துள்ளார்கள். மேலும்  புதன்கிழமைகளில் Hijama செய்வதை தடுத்துள்ளார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)

இப்னு உமர் (ரலி) கூறிய அறிவிப்பு இப்னு மாஜா (3487) பதிந்துள்ளது அதன் கருத்தாவது,  நபி (ஸல்) அவர்கள்  வெறும் வயிற்றில் ஹிஜாமா செய்வது குணப்படுத்தக்கூடியது என்றும், இறை அருள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும்   அது அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல்  அதிகரிக்கிறது. எனவே வியாழக்கிழமை அன்று அல்லாஹ்வின் அருள் மீது ஆதரவு வைத்து ஹிஜாமா செய்யுங்கள். புதன், வெள்ளி தினங்களில் ஹிஜாமா செய்யாதீர்கள். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செய்வதை தவீர்பதின் மூலம்  பாதுகாப்பாக இருங்கள். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஹிஜாமா செய்யுங்கள். இந்த நாட்களில் தான் நபி அயுப் (அலை) நோய் இருந்து பாதுகாப்பு பெற்றார்கள்.

ஹிஜாமா எப்படி செய்யப்படுகிறது?

ஹிஜாமா என்ற மருத்துவ முறையை உடலின் எந்த பாகங்களிலும் செய்யலாம். வலி உள்ள அல்லது பிரச்சனை உள்ள பாகங்களில் செய்தால் நம் பிரச்சனைகள் உடன் தீர்வு கிடைக்கும். முதன்மை ஹிஜாமா செய்யக்கூடிய ஆறு இடங்கள் உள்ளது அவற்றில் ஹிஜாமா செய்தால் நம்முடைய இருதய இரத்த மண்டல சரியசரியான நிலைக்கு வரும். மேலும் ஒவ்வொரு நோய்களுக்கும் இது வேறுபடும்.

செயல்முறை:

1. முதலாவதாக, ஹிஜாமா செய்யக்கூடிய இடங்களுள்ள முடிகளை அகற்ற வேண்டும்.

2. இறுக்கமான வாய்களை உடைய உறுதியான  கப் அல்லது கோப்பை (உலோக, கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கப், பொதுவாக பாரம்பரியமாக நபி(ஸல்) அவர்களின் காலங்களில் கொம்புகள் பயன்படுத்தப்பட்டது) இவற்றைக் கொண்டு ஹிஜாமா செய்யப்படுகிறது.

3. ஹிஜாமாவிற்காக உடலில் தேர்ந்தேடுக்கப்பட்ட பாகங்களில் சில சமயங்களில் எண்ணெய் தடவப்படுகிறது. பொதுவாக கருந்சீரக விதை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் இறுக்கமான Seal கிடைக்கிறது.

4. அவ்விடத்தில் suction mechine (உறிஞ்சும் கருவி)யை பயன்படுத்தி இரத்தங்களை ஒன்று சேர்ப்பார்கள், பிறகு சிறிய சுத்தமாக கத்திகளைக் கொண்டு அவ்விடங்களை கிறுவார்கள் ( Small cut strip on surface of skin) உடனே அவ்விடத்தில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கும்.( நபியுடைய காலத்தில் வாயால் உறுஞ்சுவார்கள்)

5. பிறகு உடனே அவ்விடத்தில் மேலே கூறப்பட்ட வெற்றியிடம் உள்ள கப்பை (கோப்பையை) (Vacuum cub). நபியுடைய காலங்களில் Cup அகப்பகுதியில் தீ வைத்து வெற்றியிடத்தை உருவாக்குவார்கள்.

6. இவ்வாறு ஒவ்வொரு 10-20 நிமிடங்கள் கோப்பைகளை மாற்றுவார்கள். இவ்வாறு இரத்தகசிவது நிற்க்கும் வரை செய்வார்கள்.

7. ஒவ்வொருவருக்கு அவர் அவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப்ப இரத்தம் வெளிவரும்.(எனக்கு தெரித ஓர் நபருக்கு அரைலிட்டர் இரத்தம் வந்தது. எனக்கு சுமார் 150ml வந்தது)

8. இவ்வாறு ஹிஜாமா முறையில் இரத்தம் (குருதி) உறுஞ்சப்படுகிறது.

ஹிஜாமா ( حجامة ) வில் அடங்கிய அறிவியல் சான்றுகள் ( Scientic Evidence in Hijama ):

மருத்துவர், மருந்துவ ஆராய்ச்சிகள் பலர், மேலும் மேலை நாட்டு மருத்துவரால் பெரிதும் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவ முறைதான் ஹிஜாமா ( حجامة). இது பண்டைய காலங்களில் சீனர்களாலும், ரோமர்களாலும், ஏதிப்தியர்களாலும் பின்பற்றிய முறைதான் இந்த ஹிஜாமா என்ற இரத்த(குருதி) உறுஞ்சுதல்.

இந்த மருத்துவ முறையில் ACUPUNCTURE மருத்துவக் கொள்கைகளும் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக நச்சுப் பொருட்களும் (Toxin), metabolic waste product, மற்றும் நம் வாழ் நாட்களில் எடுத்துக்கொண்ட மருந்துகள் (Medicine and drug) (இவை முற்றிலும் அழிவதில்லை ) இவைகள் போன்ற இரத்தக்கழிவுகளும், அடித்தோலிலுள்ள (Subcutaneous impure substance) அசுத்த பொருட்களும் தான் ஹிஜாமா முறையின் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது.

இம்முறையில் தோலில் தான் கிறல்கள் இடப்படுகிறது. ஆதனால் Subcutaneous இல் உள்ள Connective திசுவின் பொருட்கள் தான் வெளிக்கொண்டு வரப்படுகிறது. மேலும் வெளியில் இருந்து Negative அழுத்தம் தருவதால், இரத்தத்தில் உள்ள கழிவுகளும் Connective திசுவில் சேகரமாகி அகற்றப்படுகிறது. இரத்தக்குழாயின் சுவர்கள் சில Selective துகள்கள் உள்ளதால் Blood cell- RBC,WBC, ஹிமோகுளோபின்கள், Platelets, மற்றும் இரத்த புரதங்கள் அகற்றப்படுவதில்லை. இவைகள் நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாத பொருட்களாகும்.

நச்சுப்பொருட்கள் வெளியேறுவதால் பலவகையான நோய்கள் குணமடைகிறது. பல நோய்கள் நம்மை நமக்கு வராமல் தடுக்குகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top