நார் அறுந்த மலர்களாய்
நாகரிகம் நாறுதே.
கேள்வி ஞானம் யாவுமே
வேரறுந்து போகுதே.
சேர்த்து வைத்த சில்லறைகள்
சோபையிழந்து போகுதே.
பார்த்து வளர்த்த மரக்கிளைகள்
இலை பிடுங்கி மாளுதே.
தோகை விரித்த தாகம் மெங்கும்
ஊரு சனம் பேசுதே.
தோணியொன்றில் காலிரண்டும் என்ற நிலை மாறியிங்கே –
விரலுக்கொரு தோணியாய் வீணடைந்து போகுமோ ?
Islam Mohamed