News

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அறிஞர் சித்திலெப்பை, சேர் றாசிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆகியோரின் பங்களிப்புகள்

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அறிஞர் சித்திலெப்பை, சேர் றாசிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆகியோரின் பங்களிப்புகள்

கலாநிதி எம்.ஐ.எம். அமீன்

இம்­மூன்று தலை­வர்­களும் தத்தம் கால முஸ்லிம் சமூ­கத்தின் பல்­வேறு தரத்துக் கல்வித் தேவை­களை அறிந்­தி­ருந்­தார்கள் என்­பதை அவர்­க­ளது சிந்­த­னையும் செயற்­பா­டு­களும் புல­னா­கின்­றன.

சமய சூழலில் முஸ்­லிம்­க­ளுக்கு கல்வி வழங்­கப்­பட வேண்டும் என்ற கோட்­பாட்­டையே மூவரும் பின்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள். இச்­சிந்­த­னையை சித்­தி­லெப்பை உரு­வாக்கி, தான் ஏற்­ப­டுத்­திய தனியார் பாட­சா­லை­களில் அறபு ஆசி­ரி­யர்­களை தலைமை ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மித்து பாடத்­திட்­டத்தில் அறபு, இஸ்லாம் பாடங்­களை உள்­ள­டக்கி பாடப்­போ­த­னை­களை நடத்­தினார்.

அடுத்து வந்த சேர் றாசிக் பரீத் அவர்கள் அர­சாங்கப் பாட­சா­லை­களில் அறபு ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­மனம் பெற்றுக் கொடுத்து சமய சூழலை அர­சாங்க முஸ்லிம் பாட­சா­லை­களில் தொடர்ந்து காத்தார். அறபு ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆசி­ரியர் பயிற்­சியை பதி­யுத்தீன் மஹ்­மூது அவர்கள் பெற்றுக் கொடுத்து அவர்­களைத் தகைமை படைத்­த­வர்­க­ளாக்கி சமய சூழலை வளர்க்க நட­வ­டிக்கை எடுத்­தமை மூவரின் சிந்­த­னை­யிலும் இருந்த ஒற்­று­மையைக் காட்­டு­கி­றது.

சித்­தி­லெப்பை முஸ்லிம் பிள்­ளை­க­ளுக்­கான பாட­நூல்­களை எழுதி வெளி­யிட்­டதும், இஸ்­லா­மிய சிந்­த­னையைக் காப்­ப­தற்­காக பாடநூல் சபையில் முஸ்­லிம்­க­ளுக்கு அங்­கத்­து­வத்தை சேர். றாசீக் பரித் பெற்றுக் கொடுத்­ததும், இஸ்லாம் பாடப்­புத்­த­கங்கள், வழி­காட்டல் நூல்கள் என்­ப­வற்றை வெளி­யி­டு­வ­தற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் பதி­யுதீன் மஹ்­மூ­த­வர்கள் நட­வ­டிக்கை எடுத்­ததும் நோக்­கத்­தக்­க­தாகும்.

முஸ்­லிம்­களின் கல்வி வளர்ச்­சியைத் துரி­தப்­ப­டுத்த அரசின் ஆத­ரவு அவ­சியம் என்­பதில் மூவரும் கருத்­தொற்­றுமை கொண்­டி­ருந்­தனர். ஆங்­கி­லேயர் காலத்தில் அறிஞர் சித்­தி­லெப்பை கல்விப் பணி­களை ஆரம்­பிக்கும் போது முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் சட்ட நிரு­பண சபையில் இல்­லா­தி­ருந்ததால் அதற்­காகப் போரா­டியே அத­னையும் பெற்றார். அவர்­க­ளுடன் நல்­லு­றவைப் பேணி அரச ஆத­ர­வா­ள­ராக இருந்து முஸ்­லிம்­களின் கல்வி வளர்ச்­சிக்கு உதவி புரிந்தார்.

சேர். றாசிக் பரீத் (1936–1947) சட்ட சபை­யிலும் (1947-–1952) செனட் சபை­யிலும் (1952-–1970) பாரா­ளு­மன்­றத்­திலும் அங்­கத்­துவம் வகித்து அரச செல்­வாக்­குடன் கல்விப் பணி­களை முன்­னெ­டுத்துச் சென்­றுள்ளார்.

மாணவர் பருவ முதல் ஏகா­தி­பத்­திய எதிர்ப்­பு­ணர்வை பதி­யுதீன் மஹ்மூத் கொண்­டி­ருந்­ததால் இந்­நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் ஏகா­தி­பத்­திய வாதி­களின் நண்­பர்­க­ளாக செயல்­பட்­டதை சகிக்க முடி­ய­வில்லை. ஆகையால் முன்­னைய இரு­வரைப் போல ஆட்­சி­செய்த கட்­சி­க­ளுடன் இணைந்து சென்று செயற்­ப­டாது எதிர்க்­கட்­சி­க­ளுடன் சேர்ந்­து­ழைத்தார்.1956 க்குப் பின் அர­சி­யலில் தனக்­கெனத் தனி­யான ஓரி­டத்தை முயற்­சித்துப் பெற்று அதன் மூலம் முஸ்­லிம்­களின் கல்வி மேம்­பாட்­டுக்கு உழைத்­ததைக் காண முடி­கி­றது.

மூவ­ருமே முஸ்லிம் சமூ­கத்தின் கல்விப் பணி­க­ளையும் ஏனைய நலன்­க­ளையும் பேணு­வ­தற்­காக தமக்­கெனத் தனித்­தனி சங்­கங்­களை அமைத்துக் கொண்­டி­ருந்­தனர். அறிஞர் எம்.சி.சித்­தி­லெப்பை “ஜம்­இய்­யத்துல் இஸ்­லா­மிய்யா” எனும் சங்­கத்தை ஸ்தாபித்தார். சேர் றாசிக் பரீத் அவர்கள் சோனகர் சங்­கத்தின் ஆயுட்­காலத் தலை­வ­ராக இருந்தார். பதி­யுதீன் மஹ்மூத் அவர்கள் “இஸ்­லா­மிய சோசலிச முன்­ன­ணியை” அமைத்துக் கொண்­டி­ருந்தார்.
எம்.சி.சித்­தி­லெப்பை கொழும்பின் உயர் குழாத்தைச் சாரா­தவர் ஆதலால் சமூ­கத்தின் அர­சியற் தலை­மைத்­து­வத்­துக்கு தேவை­யான தகை­மைகள் அவ­ரி­ட­மி­ருந்த போதும் அர­சியல் தலை­மைத்­து­வத்தை அவரால் அடைய முடி­ய­வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் முடி­சூடாத் தலை­வ­ராக இருந்த போதும் அறிஞர் என்றே அங்­கீ­காரம் பெற்­றி­ருந்தார்.

சேர்.றாசீக் பரீத் அவர்கள் கொழும்பின் முஸ்லிம் தலை­மைத்­துவக் குழுவைச் சார்ந்­தவர். முன்னாள் சட்­ட­சபை உறுப்­பினர் டப்ளிவ். எம். அப்துர் ரகு­மானின் மகன். இதனால் முஸ்­லிம்­களின் மரபு ரீதி­யான தலை­மைத்­து­வத்தின் ஆசீர்­வாதம் அவ­ருக்கு இருந்­தது. பதி­யுதீன் மஹ்­மூ­த­வர்கள் கொழும்பு தலை­மைத்­துவக் குழுவைச் சாரா­தவர். கொழும்பு அர­சி­யற்­கு­ழுவின் சிந்­த­னைக்கு முரண்­பட்டு அர­சி­யலில் தனக்­கெனத் தனி­வ­ழி­ய­மைத்துக் கல்வி அமைச்சர் பதவி வகித்து சமூ­கத்­துக்குப் பணி­பு­ரிந்தார்.

அறிஞர் எம்.சி.சித்­தி­லெப்பை உல­கியல் அறிவும் சமய ஞானமும் அறபு மொழி அறிவும் உடை­யவர். மெய்ஞ்­ஞான சிந்­த­னையால் கவ­ரப்­பட்­டவர். பன்­னூ­லா­சி­ரியர் பத்­தி­ரி­கை­யாளர் நாவ­லா­சி­ரியர். நவீன முஸ்லிம் சிந்தனையாளர்களின் சிந்தனைப் போக்கினை கொண்டிருந்தவர். ஆதலால் சமூகத்தின் கூட்டுமொத்த வளர்ச்சியை அவர் கருத்திற் கொண்டிருந்தார்.
இம்மூவரும் தமக்கேயுரிய பாணியில் முஸ்லிம்களின் கல்வி விருத்திக்கு முயற்சித்து தமது செல்வம், அறிவு, அரசியல் ஆதிக்கம் என்பவற்றை அர்ப்பணித்து முஸ்லிம்களின் கல்வி கலாச்சார எழுச்சிக்கு உழைத்துள்ளார்கள் என்பதில் கருத்து வேற்றுமைகள் இல்லை.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் சித்தி லெப்பை நூலிலிருந்து…

-Vidivelli

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top