அகில இலங்கை முஸ்லிம் கலாசார போட்டி கடந்த 07.09.2024 திகதி கொழும்பில் நடைபெற்றது. அப் போட்டியில் 09 மாகாணத்தை சேர்ந்த பாடசாலைகள் பங்குபற்றின. அப் போட்டியில் பதுளை அல் அதான் தேசியப் பாடசாலை முதலித்தைப் பெற்றுக் கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ் வெற்றியை கொண்டாடும் முகமாக பதுளை மாநகரில் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக பெருந்திரலான வாகனங்களுடன் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
பேரணி முடிவில் பதுளை வை.எம்.எம்.ஏ கலாசார மண்டபத்தில் பெருந்திரலான மக்களுடன் பாராட்டு விழா கோலாகலமாக இடம்பெற்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதிகளாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஊவா மாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர், பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர் அழைக்கப்பட்டனர்.
இவ் விழாவில் கௌரவ அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், கல்விசார ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பதுளை பெரியபள்ளி தலைவர், வை.எம்.எம்.ஏ, மற்றும் சமூக நலன் விரும்பிகள், சமூக ஆர்வளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லஹ் இவ் வெற்றியின் கதாநாயகனாக சீனடிப் பொறுப்பாசிரியர் ஆர்.எம்.சஹீத், ஏ.சீ.எப். சாஜிதா, சறூக் சேர், இனாயா டீசர், நியார் சேர், பெற்றோர்கள், மாணவர்கள், கோச்சர்களான (றிஸ்வான், சியாம், முப்தி) போன்றோர்களின் அயராத உழைப்பே காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பதுளை அல் அதான் தேசியப்பாடசாலை இன்னும் பல்வேறு போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்று ஊவா மாகாணத்தில் முன்னணியில் திகழ்கின்றது. இதற்கு கௌரவ அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பாகும்.
தகவல்
சீனடிப் பொறுப்பாசிரியர்
ஆர்.எம்.சஹீத்.
– – – – – – – – – – – – – – – – – – – – –
மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.