ஹிஜ்ரி 1445 (கி.பி. 2024) ஆண்டிற்கான அருள்நிறைந்த ரமழானை முஸ்லிம்கள் அடைந்துள்ளனர்.
முஸ்லிம்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, முஸ்லிம்களின் ரமழான் நோன்பின் கால அளவும் மாறுபடும். இது விடியற்காலையில் இருந்து மாலைநேரம்வரை கணக்கிடப்படுகிறது. இந்த மாறுபாடு, இருப்பிடங்களுக்கு ஏற்ப நாட்டிற்கு நாடு மாறுபடலாம்.
பல்வேறு நாடுகளில், மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் 12 மணி நேரம் முதல் 17 மணி நேரம்வரை நோன்பினை அனுஷ்டிக்கப் போகின்றார்கள்.
Chile உள்ள “Porto Montt” நகரத்தில் மிகக் குறுகிய நோன்புகாலமாக இருக்கப்போகின்றது. அங்கு முஸ்லிம்கள் 12 மணி நேரம் 44 நிமிடங்கள் நோன்பு இருப்பார்கள்.
Greenland இன் தலைநகரான Nuuk இல்
மிக நீண்ட நோன்பு காலமாக இருக்கப்போகின்றது. அங்கு முஸ்லிம்கள் 17 மணி நேரம் 26 நிமிடங்கள் நோன்பு இருப்பார்கள்.
நோர்வேயின் ஒஸ்லோவில் வசிக்கும் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தின் நடுப்பகுதியில் காலை 3:30 மணி முதல் மாலை 6:45 மணி வரை மொத்தம் 15 மணி நேரம் 15 நிமிடங்கள் நோன்பு இருப்பார்கள்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் 14.14 மணி நேரமும், ஓமானின் மஸ்கட்டில் 13.53 மணி நேரமும் முஸ்லிம்கள் நோன்பை அனுஷ்டிப்பர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் இது 13.56 மணிநேரமாகவும், சவுதி அரேபியாவில் 13.56 மணிநேரமாகவும் இருக்கும்.
– – – – – – – – – – – – – – – – – – – –
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…