யுத்த தந்திர பாடநெறிகளில் இடம்பெறப்போகின்ற ஹமாஸின் போர் வியூகம்.
போரியல் வரலாற்றில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிப்பது போர் வியூகம் ஆகும். இராணுவ பலமும் பொருளாதார பலமும் இலத்திரனியல் தொழில்நுட்ப துணைகளிருந்தும் களநிலைமைக்கு ஏற்ற போர்வியூகம் அமையாவிட்டால் அனைத்தும் தலைகீழாக மாறிவிடும்.
இந்த வகையில் போரியல் நிபுணர்களின் கவனத்தை ஹமாஸின் யுத்த வியூகங்கள் ஈர்த்துள்ளன.
ஹமாஸின் போர் வியூகம்.
அந்த வகையில் தமது நிலங்களை ஆக்கிரமித்தவர்களுடனான போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஹமாஸ் அமைப்பு வகுத்திருக்கும் போர் வியூகம் போரியல் நிபுணர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது.
பலஸ்தீன் Gaza பிரதேசத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமது நிலங்களுக்குக் கீழே சிலந்தி வலையமைப்பில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பு போரிட்டு வருகின்றது. Gaza வுக்குள் இஸ்ரேலின் பீரங்கி தாங்கிகள் Tank நுழைந்துவிட்டால், ஏதோவோர் சுரங்கத்தின் வழியாக ஹமாஸ் போராளி ஒருவர் வெளிப்பட்டு அந்த tank ஐ நெருங்கிச் சென்று அதன்மீது குண்டினைப் பொருத்திவிட்டு வேறோரு சுரங்கத்தின் வழியாக சென்று மறைந்து விடுகின்றார். இதேபோன்று Tank ஐ நெருங்கிச் சென்று RPG ஷெல் தாக்குதல் நடாத்தி அதனை துவம்சம் செய்துவிடுகின்றனர். இவ்வாறு பல்வேறு வழிமுறைகளில் எதிரிகளை தாக்கியழித்து போராட்ட களத்தினை வடிவமைத்து போராடிவரும் ஹமாஸின் போர் வியூகத்தினால் Gazaவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. ஹமாஸின் தாக்குதலில் தாக்குப்பிடிக்காத இஸ்ரேல், யுத்த நிறுத்தம்வரை இறங்கி வந்திருக்கின்றது.
இது மாத்திரமன்றி, இஸ்ரேலிய தயாரிப்பான Merkava – Tank ஒன்றின் உற்பத்திச் செலவு 3,500,000 US$ ஆகும். அதாவது இந்திய விலையில் ரூபா 291,768,750.00
(291.76875 Million) ஆகும். இலங்கை விலையில் ரூபா 1,152,005,750.00
(1.152006 Billion) ஆகும். ஹமாஸ் நில மீட்புப் போராளிகளினால், இஸ்ரேலின் நூற்றுக்கணக்கான Merkava – Tank கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இது இஸ்ரேலிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தவல்ல காரணியாகும்.
இவ்வாறு மிகவும் பலம்பொருந்திய ஆக்கிரமிப்பாளர்களை தாக்கியழித்து அவர்களின் நகர்வை பின்னடையச் செய்யும் ஹமாஸின் போர் யுக்தியை சுரங்கப் போர் யுக்தி என்று, போரியல் நிபுணர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.
சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிலையங்களில் போரியல் மற்றும் யுத்ததந்திர பாடநெறிகளைப் போதிக்கும் இத்தகைய போரியல் நிபுணர்களின் பாடநெறிகளில் ஹமாஸின் சுரங்கப் பாதை போரியல் வியூகம் எதிர்காலத்தில் பாரிய செல்வாக்கினைச் செலுத்தப்போகின்றது. தற்போது சர்வதேச ஊடகங்களில் பேட்டி மற்றும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளும் யுத்தம் தொடர்பான ஆய்வாளர்கள், ஹமாஸின் மேற்கூறிய யுத்ததந்திர வியூகத்தை சிலாகித்து பேசிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் போர் வியூகம்.
எந்தப் பிரதேசத்தில் போராளிகள் இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கின்றதோ, அப்பிரதேசத்தை யுத்த விமானங்கள் மூலமோ அல்லது தூர இருந்து பீரங்கித் தாக்குதல் மூலமோ நிர்மூலமாக்குவதுதான் இஸ்ரேலினால் ஆரம்ப காலந்தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் போர் வியூகம் ஆகும்.
இதில் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகள் அகதிமுகாம்கள் உட்பட பொதுமக்களின் குடியிருப்புக்கள் அனைத்தையும் மண்ணோடு மண்ணாக நிர்மூலமாக்குவதுதான் இஸ்ரேலின் போர் வியூகமாகும்.
தற்போது தரைவழியில் Gaza வுக்குள் நுழைந்த இஸ்ரேல், தமது தரப்பின் உயிரிழப்பை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைத்து வருகின்றது. ஹமாஸ் போராளிகளுடன் போராடுவதற்குப் பதிலாக, பலஸ்தீன் பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவித்திருந்தமை சர்வதேச மட்டத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.
ஐநா சபையின் செயலாளரின் கண்டனத்தைப் பெற்ற இஸ்ரேலின் மனித உரிமை மீறலுக்கு அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் ஆதரவளிப்பது வருந்தத்தக்கதாகும்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…