இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், முஸ்லிம் சேவைக்கு பங்களிப்புச் செய்த முதிய ஓய்வு பெற்ற கலைஞர்கள், மறைந்த கலைஞர்களின் குடும்ப உறுப்பினர்களை நிலையக் கலையகம் வரச் செய்து அவர்களது கலைப் பயணங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சி மூலம் வெளிக் கொணரப் படுகிறது.
இது மறைந்தோரை ஞாபகப் படுத்துவதும் வாழ்வோரை வாழ்த்துவதுமாக அமைகிறது.
அந்த வகையில்
15/09/2020 செவ்வாய் கிழமை அன்று தமிழிலும் சிங்களத்திலும் பயான்களை
நிகழ்த்தி வரலாறு படைத்த
மர்ஹூம் ஏ.எம்.சாஹுல்
ஹமீத் ஹஸ்ரத் பற்றிய தகவல்களோடு நேயர்களோடு
பகிர்ந்து கொண்டார்கள்.
இஸ்லாமிய இலக்கிய கழகம் மற்றும் கொழும்பு செட்டியார் தெரு மீலாத் குழு செயலாளரும் பேச்சாளருமான
பதுருத்தீன் நிலாம்தீன்
மற்றும் அவரது புதல்வர்
இஷாம் மொஹிதீன் ஆகியோர். இவர்களை நேர்காணல் செய்தார் சகோதரர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ்.
இவர் சரளமாக சிங்கள
மொழி பேசி அம்மொழி மூலம் பயான் நடத்தும்
ஆற்றல் பெற்றவர். சிங்கள முஸ்லிம் மக்கள் மனங்களை கவர்ந்தவர் என்று சொன்னாலும் மிகையாகாது.
இவரது பயான்களில் சிங்கள மொழியின் பாண்டித்தியம் கண்டு பௌத்த மத குருமார்கள் கிரிஸ்துவ மத
குருமார்கள் இவர் மீது அதிக
மரியாதை வைத்திருந்தார்கள்.
முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர்
மர்ஹூம் Z.L.M.முஹம்மத்
மூலம் முஸ்லிம் சேவைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
புர்தா ஷரீபை மொழி
பெயர்த்து வாசித்தல்,
இஸ்லாமிய நற் சிந்தனை,
அதிகமான உரையாடல்கள்
என்பவற்றோடு இவரது
அழகான குரல் வளம் கண்டு
சில காலம் வரலாற்றில் ஒரு ஏடு நிகழ்ச்சியையும் நடாத்தும் வாய்ப்பும் கிடைத்தது.
முஸ்லிம்களின் விஷேச தினங்களில் சிங்கள சேவையில் சிங்களத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் முதன் முதலில்
இளைஞர்களுக்காக இளைஞர் உலகம் என்ற ஒரு
நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த பெருமை இவரையே சாரும்.
இப்படி ஆளுமை நிறைந்த நம் முன்னோர்களை அடையாளம் காட்டுவதோடு இளம் சமூகத்தினருக்கு படிப்பினையூட்டி வழிகாட்டுவதற்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சி முன் நிற்கின்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும் சகோதரர் கலாபூஷணம் எம்.எஸ்.எம்.
ஜின்னாஹ் அவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளை
தெரிவிப்பதோடு நிகழ்ச்சியை தயாரித்தளித்த
சகோதரி பாத்திமா ரினூஸியா அவர்களுக்கும் எனது உள்ளத்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…