Sri Lankan Muslim

பாரம்பரியம் : மர்ஹூம் அல் ஹாஜ் மஸ்ஹுத் ஆலிம் (பஹ்ஜி)

பாரம்பரியம் : மர்ஹூம் அல் ஹாஜ் மஸ்ஹுத் ஆலிம் (பஹ்ஜி)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கு பங்களிப்புச் செய்த முதிய ஓய்வு பெற்ற கலைஞர்கள் மறைந்த கலைஞர்களின் குடும்ப உறுப்பினர்களை நிலையக் கலையகம் வரச் செய்து அவர்களது கலைப் பயணங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சி மூலம் வெளிக் கொணர்கிறார் சகோதரர் கலாபூஷணம்

எம்.எஸ்.எம்.ஜின்னாஹ்.
இது மறைந்தோரை ஞாபகப்
படுத்துவதாகவும் வாழ்வோரை வாழ்த்துவதுமாக அமைகிறது.

அந்த வகையில் சென்ற 18/08/2020 அன்று இலங்கையில் புகழ் பெற்ற ஆலிம்களில் ஒருவராகிய

மர்ஹூம் அல் ஹாஜ்
மஸ்ஹுத் ஆலிம் (பஹ்ஜி)
பற்றிய தகவல்களை வழங்க
அவரது புதல்வர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.
அக்ரம்(நளீமி) அஷ்ஷெய்க் முதுமாணி
யூ.கே.ரமீஸ் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் சட்டத்தரணி யூசுப் ஆகியோர் நிலையக் கலையகம் வந்து நேர்காணல்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அவர்களை சகோதரர் கலாபூஷணம் எம்.எஸ்.எம்.
ஜின்னாஹ் கலந்துரையாடினார்.

மர்ஹூம் மஸூத் ஆலிமின்
வாழ்க்கை வரலாறுகளையும்
மரணம் நெருங்கிய காலகட்டத்தில்
நடந்த உருக்கமான சம்பவங்களையும்
மிகக் கவலையோடு எடுத்துக் கூறினர்.
அதனைக் கேட்ட நேயர்கள்
நெஞ்சங்களும் கலங்கித்தான்
போயிருக்கும்.

ஹஸ்ரத் மஸ்ஹுத் ஆலிம்
முஸ்லிம் சேவைக்கு அளப்பெரிய பங்களிப்பு
செய்தவர் என்பது இன்றைய
இளம் சந்ததியினருக்குத் தெரியாது. அந்த பங்களிப்பு
பற்றிய தகவல்கள் அன்றைய
பாரம்பரியத்தில் சுட்டிக் காட்டப்படவில்லை
என்பது ஒரு குறையே.

முஸ்லிம் சேவையின்
முன்னாள் பணிப்பாளர்
இஸட்.எல்.எம்.முஹம்மத்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை மூலம் இனங்காட்டினார்.
இவரது பயான்கள் துஆக்கள்
ஹஜ் கிரிகைகளுக்கான
விளக்கங்கள் என்பன அன்று
வானொலியில் கேட்டு கேட்டு
மக்கள் தம் மனதில் அவர்
நாமத்தை பதித்திருந்தனர்
அவருடைய பயான்களும்
அவர் அல்லாஹ்விடம்
அழுது இறைஞ்சும் விதமும்
மக்கள் உள்ளங்களை குலுங்கி
அழ வைத்திருக்கின்றன.

முஸ்லிம் சேவை இவரது
நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதன்
மூலம் இலங்கையில் பிரபலமானதோடு இந்தியா
காயல்பட்டிணத்திலும்
பேசப்பட்டார்.
இவர் மறைந்த செய்தி கேட்டதும்
இலங்கை முஸ்லிம் சமூகமே
கவலைப்பட்டது.
இலங்கை முஸ்லிம்களின்
நெஞ்சில் இன்றும் வாழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை

இப்படி ஆளுமை நிறைந்த
நம் முன்னோர்களை
அடையாளம் காட்டுவதோடு
இளம் சமூகத்தினருக்கு
படிப்பினையூட்டி வழி
காட்டுவதற்கும்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை பாரம்பரியம் நிகழ்ச்சி முன் நிற்கின்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவைக்கும். சகோதரர் கலாபூஷணம் எம்.எஸ்.எம்.
ஜின்னாஹ் அவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளை
தெரிவிப்பதோடு நிகழ்ச்சியை
தொகுத்தளித்த
சகோதரி பாத்திமா ரினூஸியா
அவர்களுக்கும் என் உள்ளத்து
நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai Whatsapp group

Nikalvumedai Whatsapp group நிகழ்வுமேடை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top