ஆய்வாளரும் நூல் விமர்சகரும் பன்முக எழுத்தாளருமான M.M.A.BISTHAMY எழுதிய… மக்கள் கலைஞர் மஹ்தி ஹஸன் இப்றாஹீம்
என்னையும் எல்லோரையும் வெகுவாக கவர்ந்த
மூத்த அறிவிப்பாளர் கலைஞர்
மஹ்தி ஹஸன் இப்ராஹீம் குறித்து….
இவர் குறித்து எனக்கு பேசும் அளவு என்னிடம் உள்ள தகவல்கள் போதாது..
எனது வயதின் இரட்டிப்பை ஒத்த எல்லா அனுபவமும் அவருக்கு உண்டு…
எப்போதும் கலைத்துவமும் கருத்தாழமும் மிக்க கவிதைகளை காட்சிப்படங்களை
உலக வரலாற்றில் தினம் தினம் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்களை முகநூலில் பதிவிடுவதும் குறிப்பிடத்தக்கது.
கலைஞர் மஹ்தி ஹஸன் இப்ராஹிம்….
அவரது வெகுஜன தளத்தில் ஊடகங்கள் வாயிலாக நாம் காண்கின்ற சிரிக்கின்ற சிரிப்பூட்டுகின்ற சிந்திக்க வைக்கின்ற பாத்திரம் எல்லோராலும் ஈடுபாட்டுடன் அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தன் அருமை பாரியாரின் பிரிவின் பின்னரான வலிகளை விழுங்கிக்கிக்கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்.
அவரது எழுத்தில் கலைநயம் இழையோடியுள்ளது போலவே கவலையும் இழையோடியுள்ளது. ஆனால் அதற்கு மகிழ்வால் ஆடையணிவித்துள்ளார்.
அவர் ஊடகத்துறையில் அசாதாரண ஆளுமை.
நாடக எழுத்தாளர்.
லட்சக்கணக்கான நேயர் நெஞ்சங்களில் வாழ்கிறார்.
உணர்வதை உயிர்ப்புடன் கதையாக நாடகமாக உடனுக்குடன் எழுதிவிடுவார்.
கைதேர்ந்த
நாடகாசிரியர்
நடிகர்
ரசிகர்
அவரது கடந்த கால சுவைக்கதம்பம்
தற்கால சஞ்சாரம்
அதில் யூஸுப் நானா பாத்திரம் பிரம்மாதம்.
1969 முதல் வானொலி நிகழ்ச்சிகளுக்குப் பிரதிகள் எழுதி வருகிறார்! 1972முதல் நேரடியாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்!
1979முதல் பகுதி நேர அறிவிப்பாளராகப் பணியாற்றிவிட்டு இப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கு பற்றி வருகிறார்!
வர்த்தக சேவையில் நிறைய நிகழ்ச்சிகள் எழுதி பங்கு பற்றி தயாரித்து வந்திருக்கிறார்!
முஸ்லிம் சேவையில் கலைஞர்! நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கிறார்! அமைதியாக இருப்பதை விரும்பி முகநூலில் சுவாரஷ்யமாக எழுதுகிறார்.
இத்தனை கடந்தும் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி பயணிக்கிறார்…
என்னைமட்டுமல்ல எல்லோரையும் வென்ற சிறந்த கலைஞர்.
நல்ல மனிதர்.
அல்லாஹ் அவருக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருளட்டுமாக
Bisthamy AhamedBisthamy@gmail.com
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…