அமெரிக்கா Minnesota மாநிலத்தில் Lori Saroya (Click) என்ற முஸ்லிம் பெண்மணி Blaine City Council உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (Click) Blaine City Council இல் தெரிவு செய்யப்பட்ட முதன் முஸ்லிம் Lori Saroya என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
41 வயதான Lori Saroya, தனது தெரிவு குறித்து உற்சாகமான மனநிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். Blaine இல் நகரில், தனது கணவர் மற்றும் 3 பிள்ளைகளுடன் Lori Saroya வசித்து வருகின்றார்.
“குழந்தைகளுக்கான சிறந்த சமூகத்தையும், குற்றம் களைந்த நகரமுமே தனது எதிர்கால இலக்கு.” என்று Lori Saroya குறிப்பிட்டுள்ளார்.
Lori Saroya அவர்கள், கொடுமைப்படுத்தலுக்கு எதிராக வெற்றிகரமாக குரல்கொடுக்கும் தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றிவரும் ஒரு சட்டத்தரணியாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இனரீதியான பாகுபாடுகளுக்கு மத்தியில் Lori Saroya அவர்கள் Councillor ஆக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.
– – – – – – – – – – – – – – – – – – –
முஸ்லிம் உலகின் செய்திகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group உடன் இணைந்திருங்கள்…