இந்தப் படத்திலுள்ளவை இனிப்பு, விறுவிறுப்பு சேர்க்கைகள் மற்றும் நறுமணம் சேர்க்கப்பட்ட பாக்கு வகைகளாகும்.
இவை பல்வேறு பெயர்களில் காணப்படுகின்றன… (நிஜாம் பாக்கு)
போதைப்பொருள் வியாபாரிகள்.
——————————–
போதைப்பொருள் வியாபாரிகளின் பிரதான இலக்கு மாணவர்களாவர்…
முதலில்,
எதுவுமே அறியாத மாணவர்களுக்கு…
எதுவுமே செய்யாது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் (நிஜாம்) பாக்கு வகைகளை இலகுவாக கிடைக்கச் செய்கின்றனர்..
(சாதாரணமாக இவ்வகையான பாக்குகள் கடைகளிலும் கிடைக்கின்றன)
சரி ! இப்போது இந்தக் கதையைக் கேட்டுப்பாருங்கள்…!!!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி பண்டாரவளை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவருகின்ற பெரும்பாலானவர்களின் கதையைக் கேளுங்கள்.
“எமது மாணவர் பருவத்தில் நாங்கள் நடமாடும் இடங்களிலெல்லாம் விதவிதமான பாக்குகள் அடைக்கப்பட்ட பைக்கற்றுகள் விற்பனையாகின…
நாங்கள் அவற்றால் கவரப்பட்டோம்…
எமது வீடுகளிலும் அவை பாவிக்கப்பட்டன…
அன்றாடம் அவற்றை வாங்கிச் சுவைத்தோம்…
காலம் செல்லச் செல்ல பாக்குகளை விட வீரியமான ஏதாவதொன்று எமக்குத் தேவைப்பட்டது…
பாக்குகளின் பாவனை எமக்குப் போதுமானதாக இருக்கவில்லை…
இவ்வாறு அரைமனிதனாக, நடைபிணமாக நாங்கள் அழைந்த போது…
யார், எவ்வாறு எங்களை தொடர்புகொண்டார்கள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை…
ஐஸ்(சீனியின் உருவை ஒத்த போதைப்பொருள்), ஹெரோயின், கஞ்சா போன்றவற்றை தாராளமாக எமக்கு கிடைக்கச் செய்தனர்…
அவற்றை கொள்வனவுசெய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் நாம் திருட்டிலும் ஈடுபட்டோம் …”
அன்பின் பெற்றோர்களே…
வீட்டில் கூட சாதாரணமாக நினைத்து மெருகூட்டப்பட்ட பாக்குவகைகளை பாவித்து விடாதீர்கள்…
எமது பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருங்கள் …