xZahirians அமைப்பின் சமூக நலத்துறை பிரிவின் முதலாவது செயற்திட்டத்திட்கான அடிக்கல் நாட்டும் வைபவம் “அழகு இல்லம்” என்ற தொனிப்பொருளில் கடந்த ஆகஸ்ட் 28, வியாழக்கிழமை மாவனல்லை மெடேரிகம பிரதேசத்தில் இடம்பெற்றது.
மாவனல்லை பிரதேச செயலாளர் திருமதி ப்ரியாங்கனி பெதன்கொட அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இச் செயற்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட xZahirians அமைப்பானது கடந்த ஒரு வருடமாக பழைய மாணவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், மாணவர்களுக்கான வளர்ச்சித்திட்டங்கள், கல்விசார் வளர்ச்சி நிகழ்ச்சிகள், மற்றும் இளைஞர் வழுவாக்கல் செயற்திட்டங்களையும் செய்துவருகிறது. “அழகு இல்லம்” செயற்திட்டமானது xZahirians பயணத்தின் இன்னும் ஒரு மையில்கல் ஆகவே கருதப்படுகிறது. இது xzahirians இன் சமூக நலத்துறை பிரிவின் முதலாவது செயற்திட்டம் ஆகும்.
இவ்வைபவத்தில், சபரகமுவ மாகாண ஆளுநர் திரு. தம்ம திஸாநாயக்க, xZahirians அமைப்பின் மூலோபாயக் குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான அல்-ஹாஜ் கமால்தீன், ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா தலைவர் டாக்டர் ஹமீத் ஏ அஸீஸ், மற்றும் XZahirians மூலோபாய குழு அங்கத்தவர் திரு முஷ்தாக் அலி, சமூக ஆர்வலர் அல் ஹாஜ் முபாரக், xzahirians அமைப்பின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள், நன்கொடையாளர்கள் உற்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பகிர்வு – ஷாம்ரான் நவாஸ்