மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தேவையுடையோருக்கு இலவசமாக அரிசியைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான புதுவகையான ATM இயந்திரம் ஒன்றை நிறுவியுள்ளது.
இந்த அரிசியை வழங்கும் ATM இயந்திரமானது Kampung Datuk Keramat எனும் இடத்திலுள்ள Al-Akram பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ளது. இவ் ATM இயந்திரத்திக்குரிய ATM அட்டைகள் ஸகாத் பெற தகுதியுடையவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது என்று Federal Territories Islamic Religious Department (JAWI) குறிப்பிட்டுள்ளது. ஒரு தடவைக்கு 2kg அரிசியை இவ் இயந்திரம் வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
“நிதிப் பங்களிப்பினை வழங்க விரும்புபவர்களும் இவ் ATM இயந்திரத்தின் ஊடாக பணத்தை வைப்புச் செய்யவும் முடியும். இதன் மூலம் கூடுதலான அளவு அரிசியினை வழங்க முடியும்.” என JAWI குறிப்பிட்டுள்ளது.